குருப்பெயர்ச்சி பலன் 2026: குருவின் அருளால் ரிஷப ராசிக்குக் கொட்டும் அதிர்ஷ்டம் - ஜூன் மாதத்தில் மாற்றம் உறுதி

2026 ஆம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி (Guru Peyarchi) ஜூன் மாதம் 2 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தப் பெயர்ச்சியில் ரிஷப ராசியினருக்குக் கிடைக்கும் பலன்கள் இக்கட்டுரையில் விரிவாகத் தரப்பட்டுள்ளன.
குருப்பெயர்ச்சி பலன் 2026: குருவின் அருளால் ரிஷப ராசிக்குக் கொட்டும் அதிர்ஷ்டம் - ஜூன் மாதத்தில் மாற்றம் உறுதி

இதுவரை 2ஆம் இடத்தில் இருந்த குரு, 3ஆம் இடத்திற்கு மாறுகிறார். 7, 11, 9 ஆம் இடங்களைப் பார்ப்பதால் நல்ல பலன்கள் உண்டாகும். திருமணமாகாதவர்களுக்குத் திருமணம், நிச்சயதார்த்தம் நடைபெறும். விவாகரத்துக்குக் காத்திருப்பவர்களுக்கு வழக்குகள் சாதகமாக முடியும். நண்பர்கள் மூலம் கூட்டுத் தொழிலில் லாபம். பூர்வீகச் சொத்து வழக்குகள் நீங்கும். வியாபாரிகளுக்கு நல்ல ஒப்பந்தங்கள், அரசு அனுமதிகள் கிடைக்கும். குடும்ப ஒற்றுமை மேம்படும்.

ஞானக்காரகன் என்று அழைக்கப்படும் குரு பகவானின் பெயர்ச்சியானது இந்த ஆண்டு ஜூன் மாதம் 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தக் குருப்பெயர்ச்சியில் ரிஷப ராசியினருக்குக் கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிடக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

2026 ஜூன் மாதம் 2 ஆம் தேதி இந்த வருடத்திற்கான குருப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. சனிப்பெயர்ச்சி இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறையும், ராகு கேது பெயர்ச்சி 18 மாதங்களுக்கு ஒருமுறையும், குருப்பெயர்ச்சி 12 மாதங்களுக்கு ஒருமுறையும் நடைபெறுகிறது. வருடாந்திரக் கிரகங்களான சனி, ராகுகேது, குரு ஆகிய மூன்று கிரகங்களின் பெயர்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

ஜூன் மாதம் 2 ஆம் தேதி கடக வீட்டில் உச்ச குருவாக அமரும் குரு பகவான், மூன்று மாதம் கழித்துச் சிம்ம வீட்டிற்குச் செல்கிறார். அங்கு மூன்று மாதம் இருந்துவிட்டு மீண்டும் கடகத்துக்கு வருகிறார். அதிசார குருப்பெயர்ச்சியாக இருந்தாலும், முதலில் உச்சம், பிறகு நட்பான நிலை என்கிற வகையில் இந்தக் குரு பகவான் பெரும்பாலும் நன்மைகளைத் தருவார்.

ரிஷப ராசியினருக்கு இதுவரை 2 ஆம் இடத்தில் வலுவாக இருந்த குரு பகவான், இப்போது 3 ஆம் இடத்திற்கு மாறியிருக்கிறார். 7, 11, 9 ஆம் இடங்களைக் குரு பார்ப்பதால் நல்ல பலன்கள் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்குத் திருமணமாகக்கூடிய அமைப்பு ஏற்படும். திருமணம் உறுதி செய்வது, நிச்சயதார்த்தம் ஆகும் யோகம் உண்டு. முதல் திருமணம் தோல்வி அடைந்து விவாகரத்துக்குக் காத்திருப்பவர்களுக்கு விவாகரத்து கிடைக்கும். வழக்குகள் உங்களுக்குச் சாதகமாக முடியும். இரண்டாவது திருமணம் செய்யக்கூடிய யோகமும் உண்டு.

நண்பர்கள் மூலமாக லாபம் ஏற்படும். அந்நிய இன, மத, மொழி பேசும் நபர்கள் மூலமாகக் கூட்டுத் தொழில்கள் அமையும். அந்தக் கூட்டுத் தொழில்களின் மூலமாக நல்ல லாபங்கள் கிடைக்கும். அப்பாவைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு அந்தக் கவலைகள் பரிபூரணமாக நீங்கும். வேலையை விட்டுவிட்டுத் தொழில் செய்யும் யோகம் உண்டாகும். அதன் மூலம் நிறைய நல்லவைகள் நடக்கும்.

அப்பா, தாத்தா சொத்துகளை அனுபவிக்கும் யோகம் உண்டு. பூர்வீகச் சொத்துகளில் இருந்து வந்த வழக்குகள் நீங்கும். வெளிநாட்டில் இருப்பவர்கள் மீண்டும் பூர்வீக இடத்தில் செட்டிலாகும் யோகம் உண்டு. வியாபாரிகள் அனைவருக்கும் நல்ல லாபங்கள் கிடைக்கும். தொழில் நன்றாக இருக்கும். நல்ல ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசாங்க அனுமதிகள் கிடைக்கும். குடும்பம் மேலோங்கி ஒற்றுமை ஏற்படும். மாமனார், மருமகள், மருமகன் சண்டைகள் எல்லாம் நீங்கும். மீண்டும் குடும்பத்துடன் ஒன்று சேரக்கூடிய அமைப்பு உருவாகும். கூட்டு முயற்சிகள் பலிக்கும் காலகட்டமாக இருக்கும்.

ரிஷப ராசியினருக்குப் பெரிய சோதனைகள் எதுவும் இருக்காது. 3 ஆம் இடத்தில் இருக்கும் குரு பகவான் நல்ல அனுபவங்களைக் கொடுப்பார். இதுவரை இல்லாத அளவுக்கு முயற்சிகள் மேம்படும். இந்த மாற்றங்கள் ஜூன் மாதத்தில் இருந்தே தொடங்கி, அடுத்த ஒரு வருடம் நீடிக்கும். வழிபட வேண்டிய தெய்வங்கள்: குருவின் அருளை முழுமையாகப் பெற தட்சிணாமூர்த்தியை வழிபடுவதும், குரு கிழமைகளில் மஞ்சள் நிறப் பொருட்களைத் தானம் செய்வதும் நல்ல பலன்களைத் தரும்.

(குறிப்பு: இது ஜோதிட நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது; தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக இல்லை.)

சமூக வலைத்தளங்களில் பின்தொடர