ஒரே ஆண்டில் 3 முறை நடக்கும் குரு பெயர்ச்சி! யாருக்கு நல்ல பலன்கள்?

Published on: 08 Mar 2026, 01:13 pm

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

2026 ஆம் ஆண்டு ஜோதிட பஞ்சாங்கத்தின்படி முக்கியமான கிரக நகர்வுகளில் குரு பெயர்ச்சி பலரையும் பாதிக்கப்போகிறது

ஒரே ஆண்டில் 3 முறை நடக்கும் குரு பெயர்ச்சி! யாருக்கு நல்ல பலன்கள்?

2026 ஆம் ஆண்டு ஜோதிட பஞ்சாங்கத்தின்படி முக்கியமான கிரக நகர்வுகளில் குரு பெயர்ச்சி பலரையும் பாதிக்கப்போகிறது. மார்ச் மாதம் 6-ஆம் தேதி வெள்ளிக்கிழமை சனி பெயர்ச்சி முடிந்த பின்னர், மார்ச் 11-ஆம் தேதி குரு பகவான் வக்கிரமாக சஞ்சரித்து வரும் வக்ரகுரு பெயர்ச்சி நிறைவடைகிறது. இதற்குப் பிறகு ஜூன் 2-ஆம் தேதி குரு நேராக மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு செல்லப்போகிறார்.

2026 ஆம் ஆண்டில் மொத்தம் மூன்று முறை குரு பெயர்ச்சி நடக்கவுள்ளது. அவை பின்வருமாறு:

  1. வக்கிர பெயர்ச்சி முடிவு: மார்ச் 11, 2026 – குரு மிதுன ராசியில்
  2. 2026 குரு பெயர்ச்சி: ஜூன் 2, 2026 – குரு கடக ராசியில்
  3. 2026 குரு அதிசார பெயர்ச்சி: அக்டோபர் 31, 2026 – குரு சிம்ம ராசியில்

இந்த பெயர்ச்சிகள் மூலம், குரு பகவான் பெரும்பாலான ராசிகளுக்கு நற்பலன்களை வழங்குவார். மிதுன ராசியில் நடக்கும் பெயர்ச்சி, ஜூன் மாதத்தில் கடக ராசிக்கு நகரும் போது பெரும்பாலானவர்களுக்கு சிறந்த பலன்களை தரும். ஆண்டு இறுதியில் நடக்கும் அதிசார குரு பெயர்ச்சியும், 12 ராசிகளுக்கும் சாதகமான பலன்களை வழங்கும் நிகழ்வாக இருக்கும்.

குரு பெயர்ச்சி காலத்தில் குரு பகவான் சாதக நிலையில் இல்லாத போதும், அவரது பார்வை காரணமாக பல இடங்களில் நல்ல பலன்கள் பெறப்படுவதாக ஜோதிடர்கள் குறிப்பிடுகின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW