ஜனவரி 2026இல் கஜகேசரி யோகத்தால் 5 ராசிகளுக்கு பொற்காலம் – விஸ்வரூப வளர்ச்சி உறுதி!

Published on: 18 Dec 2025, 09:27 pm

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

ரிஷப ராசிக்காரர்களுக்கு மனதில் தெளிவு உண்டாகி, தடைபட்டிருந்த பண வரவுகள் கைக்கு வரும். புதிய முதலீடுகளைத் தொடங்குவதற்கு இது சிறந்த காலமாக இருக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பும் கௌரவமும் உயரும்; நிதி ரீதியாக பலமான நிலையை அடைவீர்கள்.

ஜனவரி 2026இல் கஜகேசரி யோகத்தால் 5 ராசிகளுக்கு பொற்காலம் – விஸ்வரூப வளர்ச்சி உறுதி!

2026 ஜனவரி 2ஆம் தேதி, சந்திரனும் குரு பகவானும் மிதுன ராசியில் ஒன்றிணைந்து கஜகேசரி யோகத்தை உருவாக்க இருக்கின்றனர். இந்த அரிய யோகம் சில ராசிகளுக்கு மிகப்பெரிய வாழ்க்கை மாற்றங்களையும், வளர்ச்சியையும் கொண்டு வரும் என ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர்.

ரிஷப ராசிக்காரர்களுக்கு மனதில் தெளிவு உண்டாகி, தடைபட்டிருந்த பண வரவுகள் கைக்கு வரும். புதிய முதலீடுகளைத் தொடங்குவதற்கு இது சிறந்த காலமாக இருக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பும் கௌரவமும் உயரும்; நிதி ரீதியாக பலமான நிலையை அடைவீர்கள்.

மிதுன ராசியினருக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஆசைகள் நிறைவேறும். மேற்கொள்ளும் எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். மங்களகரமான குரு பகவானின் அருளால் வீட்டில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்; பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி பெருகும்.

சிம்ம ராசியினருக்குத் தொழிலில் எதிர்பாராத லாபங்கள் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து திடீர் பண வரவு ஏற்படும். வேலை தேடிக் காத்திருப்பவர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களில் வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. தலைமைத்துவப் பண்புகள் வெளிப்படும்; அரசு உதவிகளும் கிடைக்கும்.

கன்னி ராசியினருக்கு சொத்துக்கள் எளிதாகக் கைக்கு வந்து சேரும். ஆன்மீக நாட்டம் அதிகரித்து, ஆன்மீகப் பயணங்கள் செல்லும் வாய்ப்பு உருவாகும். பெரியவர்களின் ஆசிகள் முழுமையாகக் கிடைக்கும். வெளிநாடு தொடர்பான சுப செய்திகள் கிடைத்து புதிய வாய்ப்புகள் திறக்கும்.

தனுசு ராசியினருக்கு உடல் பிரச்சினைகள் குறைந்து, ஆரோக்கியம் மேம்படும். எதிரிகளை சந்திக்கும் தைரியம் ஏற்படும்; கடன் சுமைகள் குறையத் தொடங்கும். சமூகத்தில் மரியாதை மற்றும் புகழ் அதிகரிக்கும். திடீர் பண வரவு மற்றும் செல்வம் உங்களைத் தேடி வரும். உங்கள் பேச்சாற்றலும் குறிப்பாக கம்யூனிகேஷன் திறனும் மேம்படும்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW