18 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை, கொடூர கொலை: 40 ஆண்டுகளுக்குப் பின் 74 வயது முதியவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

Published on: 16 Jul 2026, 09:50 am

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

அமெரிக்காவில் 1982-ல் 18 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், 40 ஆண்டுகளுக்குப் பிறகு 74 வயதான டென்னிஸ் சொச்சோருக்கு விஷ ஊசி மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

18 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை, கொடூர கொலை: 40 ஆண்டுகளுக்குப் பின் 74 வயது முதியவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

அமெரிக்காவில் 18 வயது இளம்பெண்ணைக் கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்த வழக்கில், சுமார் 40 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் போர்ட் லாடர்டேல் (Fort Lauderdale) பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் பேட்ரீசியா பேட்டி கிப்போர்டு, கடந்த 1982-ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்காகத் தனது தோழியுடன் புளோரிடா மாகாணத்தின் ஹாலிவுட் பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றிற்குச் சென்றுள்ளார். அங்கு நீச்சல் குள பராமரிப்பாளராகப் பணியாற்றி வந்த டென்னிஸ் சொச்சோர் (Dennis Sochor) என்பவருடன் அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். நள்ளிரவில் தோழிக்கு உடல்நலக் குறைவு ஏற்படவே, அவர் ஓய்வெடுக்கக் காருக்குச் சென்றுவிட்டார்.

இதனைப் பயன்படுத்திக் கொண்ட டென்னிஸ் சொச்சோர், உணவு வாங்கி வரலாம் எனக் கூறி கிப்போர்டைத் தனது வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். ஆள் நடமாட்டமில்லாத மறைவான பகுதிக்குக் கொண்டு சென்று, கிப்போர்டை கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்து, அடித்துக் கொலை செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக 1987-ஆம் ஆண்டு நீதிமன்றம் டென்னிஸ் சொச்சோரை குற்றவாளி என அறிவித்து, அவருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

மரண தண்டனை விதிக்கப்பட்டு 40 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டென்னிஸ் சொச்சோருக்கு, அவரது 74-வது வயதில் நேற்று மாலை 6 மணியளவில் விஷ ஊசி செலுத்தப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவர் உயிரிழந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

கொலையுண்ட இளம்பெண் கிப்போர்டின் உடலை எந்த இடத்தில் மறைத்து வைத்துள்ளார் என்ற ரகசியத்தை, இறுதிவரை போலீசாரிடமோ அல்லது பெண்ணின் குடும்பத்தினரிடமோ கூறாமலேயே டென்னிஸ் சொச்சோரின் உயிர் பிரிந்தது குறிப்பிடத்தக்கது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW