2026 ராகு–கேது பெயர்ச்சி: எச்சரிக்கையுடன் நடக்க வேண்டிய இரண்டு ராசிகள்... எவை தெரியுமா?

ஜோதிடத்தில் கிரகப் பெயர்ச்சிகள் மனித வாழ்க்கையில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. அதில் நிழல் கிரகங்களாக கருதப்படும் ராகு மற்றும் கேதுவின் பெயர்ச்சி மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.


2026 ராகு–கேது பெயர்ச்சி: எச்சரிக்கையுடன் நடக்க வேண்டிய இரண்டு ராசிகள்... எவை தெரியுமா?

ஜோதிடத்தில் கிரகப் பெயர்ச்சிகள் மனித வாழ்க்கையில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. அதில் நிழல் கிரகங்களாக கருதப்படும் ராகு மற்றும் கேதுவின் பெயர்ச்சி மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இவ்விரு கிரகங்களும் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் ராசி நிலையைக் மாற்றிக் கொள்வார்கள். இந்த இடமாற்றத்தின் போது ராகு–கேது 1, 3, 6, 10, 11 ஆகிய இடங்களில் இருப்பது சாதகமாகவும், 2, 4, 5, 7, 8 போன்ற இடங்களில் இருப்பது பாதகமாகவும் பலன் தரும் என்று ஜோதிடம் கூறுகிறது.

அந்த வகையில், 2026 டிசம்பர் மாதம் வரை ராகு கும்ப ராசியிலும், கேது சிம்ம ராசியிலும் இருப்பார்கள். கடந்த சில மாதங்களாகவே இந்த நிலை தொடர்கிறது; இன்னும் ஒரு வருடம் இதே அமைப்பு நீடிக்க உள்ளது. இதன் காரணமாக சில ராசியினர் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.

சிம்ம ராசியினருக்கு இந்த காலகட்டம் சற்றே சவாலானதாக இருக்கலாம். கேது பகவான் சிம்ம ராசிக்கு பகை கிரகமாக கருதப்படுவதால், தொழில் மற்றும் வியாபார விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கை தேவை. இந்த நேரத்தில் குணநலன்களில் மாற்றம் ஏற்பட்டு, தேவையற்ற கடுமை அல்லது கோபம் வெளிப்படலாம். இதனால் தேவையில்லாத சண்டை, பகைமை போன்றவை உருவாகும் வாய்ப்பும் உள்ளது. எனவே பொறுமையுடன் நடந்து கொள்வது அவசியம்.

அதேபோல் கும்ப ராசியினருக்கு ராகு பகவான் அந்த ராசியில் இருப்பதால் அவசரத்தன்மை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தன்னை அதிகமாக காட்டிக் கொள்ளும் மனநிலை, வேகமான முடிவுகள் போன்றவை பின்னர் பிரச்சனைகளை உருவாக்கலாம். ஆகவே இந்த காலத்தில் எந்த முக்கிய முடிவையும் அவசரமாக எடுக்காமல், நன்றாக யோசித்து செயல்படுவது நல்லது.

மேலும் சிம்மம் மற்றும் கும்ப ராசியினர் தங்கள் வாழ்க்கை துணையின் உடல்நிலை குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நண்பர்களுடன் தேவையற்ற நெருக்கத்தை தவிர்த்து, சற்று இடைவெளி வைத்துக் கொள்வது நல்லது. புதிய நட்புகள் உருவாகும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் பழக வேண்டும்.

இதே நேரத்தில் கடகம் மற்றும் மகர ராசியினருக்கு வாக்கு ஸ்தானத்தில் ராகு–கேது பாதிப்பு இருப்பதால், பேச்சில் அதிக கவனம் தேவை. சில சமயங்களில் யோசிக்காமல் பேசுவதால் சண்டை அல்லது தேவையற்ற பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. ஆகையால் சொற்களை சீராகத் தேர்வு செய்து பேசுவது இந்த காலகட்டத்தில் மிக அவசியமாகிறது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க