இலங்கை வருகிறார் நியூஸிலாந்து துணைப்பிரதமர் வின்ஸ்டன் பீட்டர்ஸ்

நியூசிலாந்து துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ் 2025 மே 24 முதல் 28 வரை இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.

May 21, 2025 - 11:37
இலங்கை வருகிறார் நியூஸிலாந்து துணைப்பிரதமர் வின்ஸ்டன் பீட்டர்ஸ்

நியூசிலாந்து துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ் 2025 மே 24 முதல் 28 வரை இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.

இந்த விஜயத்தின் போது, ​​நியூசிலாந்தின் துணைப் பிரதமர், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோரையும், வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் எச்.எம். விஜித ஹேரத் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இந்த சந்திப்பின்போது வர்த்தகம் மற்றும் முதலீடு, விவசாயம், கல்வி, இணைப்பு, சுற்றுலா மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இருதரப்பு கலந்துரையாடல்கள் நடத்தப்படும்.

இந்தப் பயணத்தின் போது துணைப் பிரதமர் பீட்டர்ஸ் பல தனியார் துறை மற்றும் ஊடக நிகழ்வுகளிலும் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துணைப் பிரதமருடன் நியூசிலாந்து வெளியுறவு மற்றும் வர்த்தக அமைச்சகத்தைச் சேர்ந்த மூன்று மூத்த அதிகாரிகளும் வருகை தரவுள்ளனர். 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!