நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வெள்ளப் பெருக்கு
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. அடை மழையால் கட்டுக்கடங்காத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. அடை மழையால் கட்டுக்கடங்காத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இம்மாநிலத்தின் தலைநகரான சிட்னிக்கு வடக்கே உள்ள பகுதிகளில் கடுயைாக பாதிக்கப்பட்டுள்ளன. அடுத்த 24 மணி நேரத்தில் சில இடங்களில் 30 செ.மீ. மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்தள்ளது.
நாங்கள் இன்னும் மோசமான செய்திக்கு தயாராகிக் கொண்டிருக்கிறோம் என மாநில தலைவர் கிறிஸ்டோபர் மின்ஸ் தெரிவித்துள்ளார். 50 ஆயிரமம் பேர் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல தயாராக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
1921 மற்றும் 1929 ஆம் ஆண்டுக்கு பிறகு மிகவும் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளது.
இந்த மழை வெள்ளத்தில் இருவர் உயிரிழந்த நிலையில், இருவர் மாயமாகியுள்ளதுடன் 500 பேர் மீட்க்கப்பட்டுள்ளதாகவும் மாநில தலைவர் கிறிஸ்டோபர் மின்ஸ் தெரிவித்துள்ளார்.