நான் ஆடியிருக்கனும்.. கட்டுப்படுத்த முடியவில்லை... பழியை ஏற்கிறேன் - தோனி

பதிரானா போன்ற பந்துவீச்சாளர்களிடம் நல்ல வேகம் இருக்கும் அவர்களால் யார்க்கர் பந்துகளை வீசி பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

May 5, 2025 - 05:07
May 5, 2025 - 05:11
நான் ஆடியிருக்கனும்.. கட்டுப்படுத்த முடியவில்லை... பழியை ஏற்கிறேன் - தோனி

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் ஆடிய ஆர்.சி.பி. 20 ஓவர்கள் முடிவில் ஆர்.சி.பி அணி 5 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்தது. 

தொடர்ந்து 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு ரஷித், ஆயுஷ் மாத்ரே நல்ல தொடக்கம் கொடுத்தனர். 

ஆயுஷ் மாத்ரேவின் அதிரடியால் சென்னை அணி இலக்கை நோக்கி வேகமாக முன்னேறியது. 15 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு சிஎஸ்கே 160 ரன்களை எடுத்தது.

16-வது ஓவர் வரை சிஎஸ்கேவின் கைகளில் இருந்த மேட்ச் லுங்கி இங்கிடி வீசிய 17-வது ஓவரில் தலைகீழாக மாறியது. லுங்கி இங்கிடி பந்துவீச்சில் ஸ்லோவர் பந்தை தூக்கி அடித்து ஆயுஷ் மாத்ரே 94 ரன்களில் அவுட்டானார். 

களத்துக்கு வந்த பிரேவிஸ் தான் சந்தித்த முதல் பந்திலே அவுட்டாகி வெளியேறினார். அடுத்தடுத்து விழந்த 2 விக்கெட்டுகள் சிஎஸ்கேவின் ரன் வேகத்தை கட்டுப்படுத்தியது. 

18 பந்துகளுக்கு 35 ரன்கள் என்ற நிலையில் 18வது ஓவரை வீசிய சுயாஷ் சர்மா 6 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் சென்னை அணிக்கு அழுத்தம் அதிகரித்தது. அடுத்தடுத்த ஓவர்களில் சிஎஸ்கே அணி 2 ரன்களில் அதிர்ச்சி தோல்வியை தழுவியது. 

இந்த தோல்வி குறித்த பேசிய சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனி, “ நான் களத்துக்கு வந்த போது பெரிய ஷாட்டுகளை அடித்து அழுத்தத்தை குறைத்து இருக்க வேண்டும் அதன் நான் செய்யத் தவறிவிட்டேன். அதற்கான பழியை நான் ஏற்றுக்கொள்கிறேன். 

ஆர்சிபிக்கு நல்ல தொடக்கம் அமைந்தது. ஆனால் போட்டியின் நடுவில் அவர்களை நாங்கள் கட்டுப்படுத்தினோம். ஆனால் ஷெப்பர்ட் அபாரமாக விளையாடினார். பவுலர்கள் எந்த மாதிரி பந்துகளை வீசினாலும் அதில் அதிக ரன்களை எடுக்க முயற்சித்தார்.
எங்கள் பந்துவீச்சாளர்கள் யார்கர் பந்துகளை போட முயற்சிக்க வேண்டும். 

யார்கர் பந்துகளில் சின்ன தவறு நடந்தாலும் அதில் பேட்ஸ்மேன்கள் அடித்துவிடுவார்கள். இதற்கு மற்றொரு தீர்வாக லோ புல்டாஸ் பந்துகளை வீசலாம். இது அடிப்பதற்கு கொஞ்சம் கடினமான பந்தாக இருக்கும்.

பதிரானா போன்ற பந்துவீச்சாளர்களிடம் நல்ல வேகம் இருக்கும் அவர்களால் யார்க்கர் பந்துகளை வீசி பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் பவுன்சர் பந்துகளை ஆயுதமாக எடுத்து பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்துகிறார்கள். ” என்றார்
லேட்டஸ்ட்

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!