45 வயதுடைய பெண்​ ஆட்டோவில் கூட்டு வன்புணர்வு: ஐந்து பேர் கைது

வலுக்கட்டாயமாக முச்சக்கர வண்டிக்குள் இழுத்துச் சென்று, முச்சக்கர வண்டிக்குள் வைத்தே பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Apr 30, 2025 - 12:44
45 வயதுடைய பெண்​ ஆட்டோவில் கூட்டு வன்புணர்வு: ஐந்து பேர் கைது

45 வயதுடைய பெண்​ணொருவர் கடத்தப்பட்டு, முச்சக்கர வண்டி மற்றும் வீட்டிற்குள் வைத்து  கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக வெலிபென்ன பொலிஸார் ஐவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின்படி, திங்கட்கிழமை இரவு 8:50 மணியளவில் கல்மட்டை நகரில் உள்ள 05வது போஸ்ட் சந்திப்பில் பேருந்தில் இருந்து இறங்கிய பின்னர் இனந்தெரியாதோர் கடத்தியுள்ளார்.

முச்சக்கர வண்டியில் வந்த மூன்று ஆண்கள் தன்னை வலுக்கட்டாயமாக முச்சக்கர வண்டிக்குள் இழுத்துச் சென்று, முச்சக்கர வண்டிக்குள் வைத்தே பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பின்னர் சந்தேக நபர்கள் தன்னை ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு அவர்கள் தொலைபேசி மூலம் மேலும் இருவரைத் தொடர்பு கொண்டதாகவும் அவர் மேலும் கூறினார்.

பின்னர் இரண்டு ஆண்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்தார்கள். சந்தேக நபர்களில் நான்கு பேரை அடையாளம் கண்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் பொலிஸாரிடம் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட 19, 23, 24 மற்றும் 38 வயதுடைய சந்தேக நபர்கள் மீகம பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள், மதுகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர் எனத் தெரிவித்த வெலிபென்ன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!