இலங்கையில் உப்பு தட்டுப்பாடு ஏற்பட காரணம் இதுதான் - வெளியான தகவல்!

மக்கள் 10 – 12 பக்கெட் உப்புகளை எடுத்துச் செல்வதாகவும், 5 – 6 மாதங்களுக்கு போதுமான உப்பை சேமித்து வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

May 19, 2025 - 08:52
இலங்கையில் உப்பு தட்டுப்பாடு ஏற்பட காரணம் இதுதான் - வெளியான தகவல்!

உப்பு தட்டுப்பாட்டுக்கு நுகர்வோரின் தேவையற்ற அச்சமே காரணம் எனவும், இதுவேதான் அவர்களை அதிகளவில் உப்பை கொள்வனவு செய்ய வழிவகுத்துள்ளதாகவும், இதனால் உப்பு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் லங்கா உப்பு நிறுவனத்தின் தலைவர் டி. நந்தனதிலக தெரிவித்தார்.

மக்கள் 10 – 12 பக்கெட் உப்புகளை எடுத்துச் செல்வதாகவும், 5 – 6 மாதங்களுக்கு போதுமான உப்பை சேமித்து வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

“நாங்கள் சந்தைக்கு உப்பை விநியோகம் செய்கிறோம். இன்று நம் நாட்டில் உப்பு பற்றாக்குறை பற்றிப் பேசுகிறோம். இதுவே உப்பு பற்றாக்குறை ஏற்படும் என்ற தேவையற்ற அச்சத்தை நுகர்வோர் மத்தியில் உருவாக்கியுள்ளது. அதனால்தான் எல்லோரும் சந்தையில் அதிகளவில் உப்பு வாங்க முயற்சிக்கிறார்கள்.” என்றார்.

உப்பு பற்றாக்குறை குறித்து கருத்து தெரிவித்த வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க, “அடுத்த திங்களன்று உப்பு இறக்குமதி செய்வதன் மூலம் உப்பு பற்றாக்குறைக்கான தீர்வு எட்டப்படும். மக்கள் ஒரு நாளைக்கு 5 முதல் 7 கிராம் வரை உப்பு சாப்பிடுகிறார்கள். இதனை பார்க்கும் ​போது நம் நாடு 500 மெற்றிக் தொன் உப்பை உற்பத்தி செய்ய முடியாத நாடு அல்ல. திங்கள் மற்றும் புதன்கிழமைக்குள் போதுமான அளவு உப்பை நாட்டிற்கு கொண்டு வந்து சந்தைக்கு விநியோகிக்க எங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

சந்தையில் நிலவும் உப்பு தட்டுப்பாட்டுக்கு தீர்வாக ஜூன் 10 ஆம் திகதி வரை உப்பு இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்து, அதற்காக அமைச்சரவை அங்கீகாரமும் கிடைத்துள்ளது. 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!