ஷாலினி இப்படித்தான்… விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த அஜித்!
கடந்த சில மாதங்களாகவே நடிகர் அஜித் குமாரை நிறைய முறை பொது இடங்களில் பார்க்க முடிகிறது

நடிகர் அஜித்குமார் தன்னுடைய ரசிகர் மன்றத்தை மொத்தமாக கலைத்தார். அதைத்தொடர்ந்து தன்னை தல என்றும் அல்டிமேட் ஸ்டார் என்றும் யாரும் அழைக்கக்கூடாது என அறிக்கை வெளியிட்டார்.
இதனால் ரசிகர்கள் அவருடைய திரைப்படத்தின் அப்டேட்டுக்கு பல நாள் தவம் இருந்த சம்பவம் நடந்திருக்கிறது.
ஆனால் கடந்த சில மாதங்களாகவே நடிகர் அஜித் குமாரை நிறைய முறை பொது இடங்களில் பார்க்க முடிகிறது. சமீபத்தில் துபாயில் நடந்த அவருடைய ரேஸ் சமயத்தில் நிறைய பேட்டிகளை ரசிகர்களுக்கு கொடுத்து ஆச்சரியப்படுத்தி வந்தார்.
அந்த நேரத்தில் திடீரென அவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த விருது விழா நடந்து முடிந்து இருக்கிறது.
இதைத்தொடர்ந்து ஆங்கில மொழி பத்திரிகைகளுக்கு நடிகர் அஜித் பேட்டி கொடுத்து வருகிறார். அந்த பேட்டியில் தன்னுடைய மனைவி குறித்து கூறும்போது, திருமணத்திற்கு முன்னர் ஷாலினியும் மிகப் பிரபலமானவர்தான்.
நிறைய ரசிகர்கள் இருந்தனர். ஆனால் என்னை திருமணம் செய்து கொண்டவுடன் அவர் தன்னுடைய நடிப்பிலிருந்து விலகினார். பல நேரங்களில் என்னுடைய முடிவுகள் தவறாக மாறி இருக்கிறது. அப்பொழுது எல்லாம் அவர் எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து உறுதுணையாக இருந்தார்.
இன்று நான் வாங்கும் எல்லா பாராட்டுகளுக்கும் அவர்தான் சொந்தக்காரர் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக பல படங்கள் நடித்த ஷாலினிக்கு அப்போதே ரசிகர்கள் ஏராளம்.
பின்னர் ஹீரோயினாக அறிமுகமாகி சில படங்கள் நடித்த நிலையில் அஜித்தை காதலித்து திருமணம் செய்துக்கொண்டதால் நடிப்பில் இருந்து விலகினார்.