புரட்டாசி முதல் நாள்: கடன் சுமை தீர எளிய வழிபாட்டு முறை!

Published on: 17 Sep 2025, 06:24 pm

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

இன்று புரட்டாசி முதல் நாள் பிறக்கவிருக்கிறது. இந்த மாதம் பெருமாளுக்கு உரிய மாதம் என்பதால், ஊர் முழுவதும் “கோவிந்தா கோவிந்தா” என்ற கோஷம் நம் காதுகளில் ஒலிக்கும்.

புரட்டாசி முதல் நாள்: கடன் சுமை தீர எளிய வழிபாட்டு முறை!

புரட்டாசி முதல் நாள்: இன்று புரட்டாசி முதல் நாள் பிறக்கவிருக்கிறது. இந்த மாதம் பெருமாளுக்கு உரிய மாதம் என்பதால், ஊர் முழுவதும் “கோவிந்தா கோவிந்தா” என்ற கோஷம் நம் காதுகளில் ஒலிக்கும். இந்த நாமத்தை காதில் கேட்கும் போதே நம்முடைய கஷ்டத்தில் பாதி தீர்ந்துவிடும் என்பது ஒரு நம்பிக்கை. இன்றைய சூழ்நிலையில் இருக்கக்கூடிய மிகப்பெரிய கஷ்டம் என்றால் அது பணக்கஷ்டமும், கடன் சுமையும்தான். பெருமாளை வழிபாடு செய்யக்கூடிய பக்தர்களுக்கு பணக்கஷ்டம் சீக்கிரம் நீங்கும் என்பதும் ஒரு நம்பிக்கை.

திருப்பதி பெருமாளின் அருள்

திருப்பதி பாலாஜி கோவிலில் கொட்டாத பணமா? திருப்பதி பெருமாளை வழிபாடு செய்பவர்களுக்கு வாழ்வில் நிச்சயம் திருப்பம் உண்டாகும். இந்த ஒரு புரட்டாசி மாதத்திற்குள் உங்கள் வீட்டு பணக்கஷ்டம் எல்லாம் சரியாகி, கடன் சுமையெல்லாம் தீர்ந்து நீங்களும் செல்வ செழிப்பாக வாழ வேண்டுமென்றால், இந்த சிறப்புமிக்க நாளில் செய்ய வேண்டிய ஒரு எளிமையான பணம் ஈர்க்கும் ஆன்மீகம் பரிகாரத்தைப் பற்றி நாம் தெரிந்துகொள்ளலாம்.

இன்றைய தினம் புரட்டாசி மாதம் முதல் நாள் மட்டுமல்லாமல், பெருமாளுக்கு உரிய ஏகாதசி திதியும் இருப்பதால், இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கு எதிர்காலத்தில் பெரிய அதிர்ஷ்டம் காத்துக் கொண்டிருக்கிறது என்று தான் அர்த்தம். அனைவருக்கும் பெருமாளின் அருள் கிடைக்கும்.

பணம் ஈர்க்கும் திருப்பதி பெருமாள் பரிகார முறைகள்:

காலை சூரிய உதயத்திற்கு முன்பாகவே எழுந்து குளிக்க வேண்டும். குளிக்கின்ற தண்ணீரில் கொஞ்சம் துளசி இலைகளைப் போட்டு, அந்த தீர்த்தத்தில் குளித்து விடுங்கள். இதனால் உங்கள் உடம்பைப் பிடித்த பீடை விலகும் என்பது நம்பிக்கை.

இந்த பரிகாரத்தை நாளை காலை 6:00 மணியிலிருந்து 6:10க்குள் செய்யலாம். காலை வேளையில் தவறவிட்டவர்கள் மாலை 6:00 மணியிலிருந்து 6:10க்குள் இந்த பரிகாரத்தைச் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பரிகாரத்தைச் செய்யும்போது உங்கள் வீட்டில் துளசி இலையின் வாசம் வீச வேண்டும். முதலில் துளசி இலைகளைத் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். நிலை வாசலில் கொஞ்சம் துளசி இலைகளையும், பூஜை அறையில் கொஞ்சம் துளசி இலைகளையும் வைத்து விடுங்கள்.

காலையில் நிலை வாசலைக் கூட்டி அழகாக அலங்காரம் செய்து கோலம் போட்டுவிட வேண்டும். நிலை வாசலில் மஞ்சள் குங்குமப்பொட்டு அழகாக வைத்திருக்க வேண்டும்.

பச்சை கற்பூரம் வழிபாடு:

நிலை வாசலின் வலது பக்கத்தில் ஒரு மண் அகல் விளக்கு அல்லது தூபக்கால் வைத்துக் கொள்ளுங்கள்.

திருப்பதி வெங்கடாசலபதியை மனமுருக நினைத்துக் கொள்ளுங்கள்.

அதன் மேலே ஒரு சின்ன துண்டு பச்சை கற்பூரத்தை வைத்து “ஓம் நமோ நாராயணா” என்ற மந்திரத்தைச் சொல்ல வேண்டும்.

அந்த பச்சை கற்பூரத்தை ஏற்றி நாராயணரை வீட்டிற்குள் அழைக்க வேண்டும்.

நிலை வாசலில் நாளைய தினம் திருப்பதி பெருமாளை நினைத்து, பச்சை கற்பூரத்தை ஏற்றி

ஓம் நமோ நாராயணா” மந்திரத்தை சொல்லி எவர் ஒருவர் வழிபாடு செய்கிறீர்களோ, அவர்கள் வீட்டில் பணக் கஷ்டம் என்பதே இருக்காது.

அந்த பச்சைக் கற்பூரத்தின் ரூபத்தில் பெருமாள் உங்கள் வீட்டிற்குள் நுழைந்து விடுவார்.

பச்சைக் கற்பூரத்தை ஏற்றி அந்த கற்பூரம், நிலை வாசலிலேயே எரிந்து அணையும் வரை அந்த இடத்திலேயே வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

இந்த பரிகாரத்தின் பலன்கள்:

நிலை வாசலில் பச்சைக் கற்பூரத்தை ஏற்றுவது என்பது ஒரு சிறு எளிமையான பரிகாரம்தான். ஆனால் இந்த பரிகாரத்திற்குப் பின்னால் மிகப்பெரிய சக்தி இருக்கிறது. பெரிய பெரிய கஷ்டங்களுக்கு கூட சின்ன சின்ன பரிகாரங்கள் சுலபமாக ஒரு தீர்வை காட்டிக் கொடுக்கும். அதுபோலத்தான் உங்களின் அதீத பணக் கஷ்டத்தை சரி செய்ய உங்களைத் தேடி வந்திருக்கும் ஒரு எளிமையான பரிகாரம் இது. இந்த வழிபாட்டின் மூலம் தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம், கட்டு கட்டாகப் பணம் என்று லட்சுமி கடாட்சம் அந்த வீட்டில் தாண்டவம் ஆடத் துவங்கிவிடும்.

கூடுதல் வழிபாடுகள்:

முடிந்தால், வீட்டின் அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று, அந்தக் கோவிலில் இருந்து கொஞ்சம் தீர்த்தம் மற்றும் துளசி இலைகளை வாங்கி வந்து உங்கள் பீரோவில் வையுங்கள்.

முடிந்தால் உங்கள் வீட்டு பெருமாளுக்கு பச்சை கற்பூரத்தை தாடை பகுதியில் சாத்தி வழிபாடு செய்யுங்கள். நிச்சயம் உங்கள் குடும்பம் சீரும் செழிப்புமாக நன்றாக இருக்கும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் இருக்காது.

நம்பிக்கை இருந்தால் இந்த வழிபாட்டை செய்து பலன் பெறலாம்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW