கொழும்பு நகரில் வீட்டுத் தொகுதிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த பெண்
தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கியை அந்தப் பெண் எடுத்துச் செல்வதைக் கண்ட வீட்டு வளாகத்தில் இருந்த பாதுகாப்பு அதிகாரி கண்டுள்ளார்.

கொழும்பில் உள்ள ஹவ்லொக் சிட்டி வீட்டுத் தொகுதிக்குள் ரி-56 துப்பாக்கியுடன் ஒரு பெண் நேற்று (மே 20) கைது செய்யப்பட்டார்.
தனது காரில் இருந்து தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கியை அந்தப் பெண் எடுத்துச் செல்வதைக் கண்ட வீட்டு வளாகத்தில் இருந்த பாதுகாப்பு அதிகாரி, அது குறித்து பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளார்.
பின்னர் வெள்ளவத்தை பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கியையும் பெண்ணையும் தமது காவலில் எடுத்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த துப்பாக்கி உண்மையானதா இல்லையா என்பது குறித்தும், அந்தப் பெண் துப்பாக்கியை எவ்வாறு பெற்றார் என்பது குறித்தும் விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.