படுக்கையை வாடகைக்கு விட்டு சம்பாதிக்கும் இளம்பெண்.. இப்படியும் ஒரு தொழிலா?
இதன்மூலம் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்பதை அறிந்துக்கொண்டார். பாதுகாப்பை உறுதி செய்ய சில கண்டிஷன்களை போட்டார்.

கனடாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது படுக்கையில் பாதி இடம் உனக்கு தான் என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டு அதன் மூலம் லட்சங்களில் வருமானமும் ஈட்டி வருகிறார். ஆனா அதில் ஒரு கண்டிஷன் படுக்கையில் மட்டும் தான் இடம்.
கனடாவை சேர்ந்த 37 வயதான மோனிக் ஜெரேமியாவின் வாழ்க்கையை கொரோனா புரட்டிப்போட்டது. லாக்டவுன் ஜெரேமியாவின் வேலையை பறிந்தது. அவரது உறவிலும் விரிசல் ஏற்பட்டது.
இதன்காரணமாக பொருளாதார நெருக்கடிக்கு ஜெரேமியா தள்ளப்பட்டார். அப்போது தான் ஹாட் பெட் கான்செப்டில் வருமானம் ஈட்டும் ஐடியா அவருக்கு வந்தது.
ஹாட் பெட் என்றால் முன்பின் தெரியாத இருவர் ஒரே படுக்கையை வெவ்வேறு நேரங்களில் பகிர்ந்துக்கொள்வது. பொதுவான இதுபோன்ற ஹாட் பெட் பழக்கம் பணியிடங்கள், போர் சூழல்களில் பயன்படுத்தப்படும்.
சுருக்கமான சொன்னால் ரூமில் நண்பர் ஒருவர் ஷிப்ட் சென்ற பின் அடுத்த அறையில் இருப்பவர் அவரது படுக்கையை பயன்படுத்துவது.
இந்த கான்செப்டிலும் ஜேரேமியா ஒரு புதுமையை கொண்டுவந்தார்.
அதாவது தன்னுடைய படுக்கையில் பாதி இடத்தை வாடகைக்கு கொடுப்பது என முடிவு செய்து விளம்பரம் கொடுத்தார். ஜெரேமியா எதிர்பார்த்தது விட் ரெஸ்பான்ஸ் அள்ளியது.
இதன்மூலம் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்பதை அறிந்துக்கொண்டார். பாதுகாப்பை உறுதி செய்ய சில கண்டிஷன்களை போட்டார்.
அதேபோல் தனிமையை போக்கவே இந்த சேவையை வழங்குவதாகவும் வேறு எந்த உடல் ரீதியிலான சிண்டல்கள் கூடாது என தெளிவுப்படுத்தியுள்ளார். இதன்மூலம் மாதம் 50000 டாலர் வரை அவர் சம்பாதித்துள்ளதாக கூறப்படுகிறது.