பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதாகப் பொய் சொன்னவருக்கு சிறை
2022இல் அவர் ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த நிலையில், 2024ஆம் ஆண்டு சீனாவின் ஷென்ஜென் நகரில் நடந்த அழகுப் போட்டியில் வெற்றிபெற்றார்.

சீனாவைச் சேர்ந்த அழகிப் போட்டி வெற்றியாளர் ஒருவர் தாம் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதாகப் பொய் கூறியதால், 8 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
28 வயது லீ சிஷுவான் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மொழி அறிவியலில் பட்டம் பெற்றதாகச் சொல்லிப் போலி ஆவணங்களைத் தயாரித்து 2021 இல் மேற்படிப்புக்கு ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்தார்.
2022இல் அவர் ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த நிலையில், 2024ஆம் ஆண்டு சீனாவின் ஷென்ஜென் நகரில் நடந்த அழகுப் போட்டியில் வெற்றிபெற்றார்.
தொடர்ந்து கொலம்பியா பல்கலைக்கழகமும் ஹாங்காங் பல்கலைக்கழகமும் விசாரித்த நிலையில், அவர் கொலம்பியா பல்கலைக்கழத்தில் படிக்கவில்லை என்று கொலம்பியா உறுதி செய்தது.
பிறகு ஹாங்காங்க் பல்கலைக்கழகத்தின் நிர்வாகிகள் லீயை சந்திக்க முயன்ற நிலையில், லீ அதனை மறுத்து சீனாவுக்குத் தப்பிச்செல்ல முயன்றார். ஆனால் அவரை ஹாங்காங் குடிநுழைவுச் சாவடி அதிகாரிகள் தடுத்தனர்.
லீ சீனாவிலுள்ள முகவரிடம் 380,000 யுவான் செலுத்தி போலிப் பட்டத்தைப் பெற்றதாகக் காவல்துறையிடம் கூறினார்.