2025 இறுதியில் இயற்கை பேரழிவு.. ஏற்கனவே கணித்த பாபா வாங்கா.. ஜப்பான் சுனாமிக்கு அதுதான் காரணமா?

Published on: 10 Dec 2025, 07:23 am

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வாங்கா 2025 இறுதியில் ஜப்பானில் ஒரு பெரிய இயற்கை பேரழிவு ஏற்படும் என ஏற்கனவே கணித்திருந்தார். .

2025 இறுதியில் இயற்கை பேரழிவு.. ஏற்கனவே கணித்த பாபா வாங்கா.. ஜப்பான் சுனாமிக்கு அதுதான் காரணமா?

சமீபத்தில் ஜப்பானின் பல்வேறு பகுதிகளில் 7.6 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜப்பான் வானிலை ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கையை விடுத்தது. பசிபிக் கடலோரப் பகுதிகளில் 20 முதல் 70 சென்டிமீட்டர் அளவில் சுனாமி அலைகள் உருவாகின என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அதிர்ஷ்டவசமாக, இந்த சுனாமி குறைந்த உயரத்தில் மட்டுமே கடற்கரையைத் தாக்கியதால், பெரிய சேதம் ஏதும் இல்லை. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை பின்வாங்கப்பட்டது. இருப்பினும், நிலநடுக்கத்தால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, பல பகுதிகளில் சேவைகள் ஸ்தம்பித்துள்ளன. கடற்கரையில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியேற்றப்பட்டனர்.

அதிகாரிகள் தெரிவிக்கையில், அடுத்த 2–3 நாட்களில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளனர்.

இந்தச் சூழலில், 2025 ஆம் ஆண்டு குறித்த பாபா வாங்காவின் கணிப்புகள் மீண்டும் வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. பல்கேரியாவைச் சேர்ந்த "பாபா வாங்கா" என அழைக்கப்படும் ரியோ டாட்சுகி , 2025 இறுதியில் ஜப்பானில் ஒரு பெரிய இயற்கை பேரழிவு ஏற்படும் என ஏற்கனவே கணித்திருந்தார்.

ரியோ டாட்சுகி 1999இல் எழுதிய "தி ஃபியூச்சர் தட் ஐ சா" என்ற புத்தகத்தில், 2020இல் பேரழிவை ஏற்படுத்தும் உலகளாவிய நோய்த்தொற்று பற்றி குறிப்பிட்டிருந்தார். இது கோவிட்-19 வைரஸ் மூலம் உண்மையானது. அதே புத்தகத்தில், 2025இல் ஜப்பானில் பெரிய சுனாமி ஏற்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சமீபத்திய நிலநடுக்கமும், சுனாமி எச்சரிக்கையும், பாபா வாங்காவின் கணிப்புகளுடன் ஒத்துப்போகின்றன என்ற கருத்து பரவலாக எழுந்துள்ளது. இது பொதுமக்களிடையே பயத்தையும், எச்சரிக்கை உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் கிடைக்கும் அறிக்கைகள், ஊடக கட்டுரைகள் மற்றும் பொது ஊடக ஊடாகப் பரவிய அனுமானங்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளன. பாபா வாங்காவின் கணிப்புகள் அறிவியல் அல்லது நம்பகமான முன்னறிவிப்பு மூலங்கள் அல்ல. இது ஒரு தகவல் வழங்கல் மட்டுமே. எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன், தொடர்புடைய அதிகாரப்பூர்வ மூலங்களையோ அல்லது நிபுணர்களையோ கலந்தாலோசிக்கவும்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW