வாட்ஸ்அப்: இனிமேல் வேற லெவல் அனுபவம் - வரவிருக்கும் அசத்தலான அம்சங்கள்!
வாட்ஸ்அப்பில் லைவ் போட்டோஸ், மெசேஜ் மொழிபெயர்ப்பு, திரெட்டட் ரிப்ளைஸ் மற்றும் வீடியோ நோட்ஸ் போன்ற பல புதிய அம்சங்கள் விரைவில் வரவிருக்கின்றன. இந்த அப்டேட்கள் பற்றிய முழு விவரங்களை இங்கே காணலாம்!
உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோரால் பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப், தனது பயனர்களுக்கு புதியதொரு அனுபவத்தை வழங்க தயாராகி வருகிறது. பல்வேறு சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள அம்சங்களை அறிமுகப்படுத்த வாட்ஸ்அப் திட்டமிட்டுள்ளது.
ஐ.ஓ.எஸ் பயனர்கள் இனி தங்கள் லைவ் போட்டோஸ்-ஐ (Live Photos) ஸ்டேட்டஸாகவும், தனிப்பட்ட சாட்களிலும் எளிதாகப் பகிர முடியும். இதேபோல், ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக மோஷன் போட்டோஸ் (Motion Photos) பகிரும் வசதி விரைவில் வருகிறது. இந்த அப்டேட்கள் மூலம் உங்கள் நினைவுகளை இன்னும் அழகாகப் பதிவு செய்ய முடியும்.
அதுமட்டுமின்றி, பயனர்கள் சாட்களில் இருந்து வெளியேறாமலேயே மெசேஜ்களை மொழிபெயர்க்கும் (Message Translation) வசதியும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இது உலகளாவிய தகவல்தொடர்பை இன்னும் எளிதாக்கும். குரூப் சாட்களை இன்னும் சுவாரஸ்யமாக மாற்ற, மெசேஜ்களுக்குப் பதிலளிக்கும் திரெட்டட் ரிப்ளைஸ் (Threaded replies) வசதியும், குறுகிய வீடியோ நோட்ஸ் (Video Notes) அனுப்பும் வசதியும் விரைவில் வரவுள்ளன.
இந்த அதிநவீன அம்சங்கள் அனைத்தையும் பெற, உங்கள் வாட்ஸ்அப் செயலியை எப்போதும் புதுப்பித்த நிலையில் வைத்திருப்பது அவசியம். இனி வாட்ஸ்அப் பயன்பாடு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு சிறப்பானதாக இருக்கும்.
Editorial Staff