யாழ்ப்பாணத்தில் போதைக்கு அடிமையான குடும்பஸ்தர் மரணம்

யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (20) உயிரிழந்துள்ளார்.

May 21, 2025 - 11:33
யாழ்ப்பாணத்தில் போதைக்கு அடிமையான குடும்பஸ்தர் மரணம்

யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (20) உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர்  மது மற்றும் புகை பழக்கத்திற்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளது. 

அவர் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் உடல் சுகவீனம் ஏற்பட்டு இரத்த வாந்தி எடுத்ததாகவும் பின்னர்  யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அன்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார். மேலும் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!