12 ஆண்டுகளுக்கு பின் கடக ராசியில் குரு-சூரிய சேர்க்கை: ஜூலையில் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட்!

Published on: 30 Jun 2026, 06:49 pm

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

சூரியனும் குருவும் 12 ஆண்டுகளுக்குப் பிறகு கடக ராசியில் ஒன்றிணைகிறார்கள். இந்த மகத்தான கிரக சேர்க்கை மேஷம், ரிஷபம், கடகம், துலாம் ஆகிய 4 ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய நிதி லாபத்தையும், தொழில் முன்னேற்றத்தையும் கொடுக்கும்.

12 ஆண்டுகளுக்கு பின் கடக ராசியில் குரு-சூரிய சேர்க்கை: ஜூலையில் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட்!

சென்னை: ஜூலை மாதம் ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாதமாகும். ஏனெனில் இந்த மாதத்தில் பல கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படுவதோடு, இரண்டு முக்கியமான கிரகங்களின் சேர்க்கையானது சுமார் 12 ஆண்டுகளுக்கு பின் நிகழவுள்ளது. அதுவும் கிரகங்களின் ராஜாவாக கருதப்படும் சூரியனும், தேவர்களின் குருவான குரு பகவானும் ஒன்றிணைந்து பயணிக்கவுள்ளனர்.

இந்த சேர்க்கையானது கடக ராசியில் ஜூலை 16 ஆம் தேதி நிகழவுள்ளது. இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கை சுமார் 1 மாத காலம் நீடித்திருக்கும். வேத ஜோதிடத்தில், சூரியன் தன்னம்பிக்கை, பதவி, தலைமைத்துவம், கௌரவம் மற்றும் நிர்வாகப் பணிகளுக்கான காரணியாகக் கருதப்படுகிறார். அதே சமயம் குரு பகவான் அதிர்ஷ்டம், கல்வி, செல்வம், அறிவு, திருமணம், மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்கான காரணியாகக் கருதப்படுகிறார்.

ஜோதிடத்தில் சூரியனும், குரு பகவானும் நட்பு கிரகங்களாகும். அதுவும் குரு பகவானின் உச்ச ராசியில் இந்த சேர்க்கை நிகழ்வதால், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைத்து, நிதி நிலையில் நல்ல உயர்வும், தொழிலில் முன்னேற்றமும் ஏற்படவுள்ளது. இப்போது 12 ஆண்டுகளுக்கு பின் கடக ராசியில் ஒன்றிணையும் குரு-சூரியனால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்

மேஷ ராசியின் 4 ஆவது வீட்டில் குரு-சூரிய சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் திடீர் உயர்வு ஏற்படும். தொழில் மற்றும் நிதி நிலையில் எதிர்பாராத அளவில் முன்னேற்றத்தைக் காணக்கூடும். இக்காலத்தில் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆடம்பரமான வாழ்க்கை வாழ்வீர்கள். செல்வாக்குமிக்கவர்களின் நட்பு கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பும் உள்ளது.

ரிஷபம்

ரிஷப ராசியின் 3 ஆவது வீட்டில் குரு-சூரிய சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். கணிசமான நிதி ஆதாயங்களைப் பெறக்கூடும். வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. சிலருக்கு புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தைக் காணக்கூடும். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதன் மூலம் டபுள் ஜாக்பாட் கிடைக்கும்.

கடகம்

கடக ராசியின் முதல் வீட்டில் குரு-சூரிய சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். செல்வம் பெருகும். தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பரம்பரை சொத்துக்களால் நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பண வரவு அதிகரிக்கும்.

துலாம்

துலாம் ராசியின் 10 ஆவது வீட்டில் குரு-சூரிய சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை, தைரியம், அறிவு மேம்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். அரசு வேலை செய்பவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடைவதோடு, நல்ல லாபமும் கிடைக்கும். சமூகத்தில் செல்வாக்குமிக்கவர்களின் நட்பு கிடைக்கும்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW