அமெரிக்க ஜனதிபதியாக பொறுப்பேற்ற ஜோ பைடன் தனது வளர்ப்பு பிராணிகளுடன் கடந்த ஜனவரி மாதம் வெள்ளை மாளிகையில் குடியேறினார்.
ஜனதிபதி ஜோ பைடன் 2008-ம் ஆண்டு ஜெர்மன் ஷெப்பர்டு வகையை சேர்ந்த சாம்ப் என்ற நாயையும், 2018-ம் ஆண்டு அதே வகையை சேர்ந்த மேஜர் என்ற நாயையும் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
இதற்கிடையே, ஜனதிபதி ஜோ பைடனின் வளர்ப்பு நாய்களில் ஒன்றான சாம்ப் கடந்த ஜூன் மாதம் இறந்தது.
இந்நிலையில், அமெரிக்க ஜனதிபதி ஜோ பைடன் வசிக்கும் வெள்ளை மாளிகைக்கு புதிய வரவாக கமாண்டர் என்ற ஜெர்மன் ஷெப்பர்டு நாய் வந்துள்ளது.
ஜனதிபதி ஜோ பைடனுக்கு அவரது சகோதரர் ஜேம்ஸ் பைடன், மருமகள் சாரா பைடன் ஆகியோர் கமாண்டர் நாயை பரிசளித்துள்ளனர்.
பிறந்து மூன்றரை மாதமான கமாண்டர், வெள்ளை மாளிகைக்கு வந்ததை ஜோ பைடன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.