2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (23) வெளியான நிலையில், அப்பரீட்சைக்குத் தோற்றிய பெரும்பாலான பரீட்சார்த்திகள் தங்களுடைய சுட்டெண்ணை மறந்துள்ளமை தொடர்பில், தகவல்கள் கிடைத்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
எனவே, பரீட்சை சுட்டெண்ணை மறந்த, பரீட்சார்த்திகள் தங்களுடைய தேசிய அடையாள அட்டை இலக்கத்தை பயன்படுத்தி, தமது பரீட்சை பெறுபேறுகளை பார்வையிடவோ அல்லது தரவிறக்கம் செய்துக்கொள்ளவோ முடியும் என அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் காணப்படுமாயின், அது தொடர்பில் 011 2 784 208
011 2 784 208, 011 2 784 537 அல்லது 011 3 140 314 மற்றும் 1911 மற்றும் விசேட தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி தெளிவுப்படுத்திக்கொள்ள முடியும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் பரீட்சை சுட்டெண்களை பயன்படுத்தியே பெறுபேறுகளை பார்வையிட முடிந்தமை குறிப்பிடத்தக்கது.