- Advertisement -
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ.ஷென்ஹொன் அலரி மாளிகையில் நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது, இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு சீனாவிடமிருந்து கிடைக்கும் தொடர்ச்சியான ஒத்துழைப்பிற்கு பிரதமர் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
இதன்போது, இலங்கையின் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்வதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள சீன தூதுவர், சீன அரசாங்கத்தின் ஒத்துழைப்பு தொடர்ந்து இலங்கைக்கு வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த மாதம் வரவிருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினத்தை முன்னிட்டு சீன ஜனாதிபதி மற்றும் சீன பிரதமரின் சார்பில் சீன தூதுவர் முன்கூட்டிய பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.