- Advertisement -
சின்னத்திரையில் பகல் நிலவு சீரியலின் மூலம் அறிமுகமானவர் ஷிவானி நாராயணன். தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார்.
இதனை வைத்தே விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார் ஷிவானி நாராயணன்.
இதில் சக போட்டியாளரான பாலாஜி முருகதாஸுடன் நெருக்கமாக பழகினார் ஷிவானி. அவருக்கு மசாஜ் செய்துவிடுவது ஊட்டி விடுவது என சேவை செய்து வந்தார். இதனால கடுப்பான ஷிவானியின் அம்மா பிக்பாஸ் வீட்டுக்குள்ளேயே வந்து டிவி நிகழ்ச்சி என்றும் பாராமல் ஏறிவிட்டார்.
இதனால் ஒரே நாளில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் டிஆர்பி எகிறியது. சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக உள்ள ஷிவானி நாராயணன் அடிக்கடி போட்டோ ஷூட் செய்து அந்த போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார். பிக்பாஸ் மூலம் பிரபலமான ஷிவானிக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கமலின் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிப்பதாக தகவல் வெளியானது.
இதையடுத்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஷிவானி இயக்குனர் பொன்ராமுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து அதில் சிறந்த இயக்குனருடன் பணிபுரிவது பெருமையாக உள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.
தற்போது பொன்ராம் விஜய் சேதுபதியை வைத்து விஜேஎஸ்46 படத்தை இயக்கி வரும் நிலையில் அடுத்த படத்திலும் விஜய் சேதுபதியுடனா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் மேலும் ஒரு புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார் ஷிவானி நாராயணன். இதையும் தனது இன்ஸ்டா பக்கத்திலேயே அறிவித்திருக்கிறார்.
அவருடைய அடுத்தப்படம் நடிகரும் இயக்குநருமான ஆர்ஜே பாலாஜியுடன் தான். ஆர்ஜே பாலாஜியுடன் இருக்கும் போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ள ஷிவானி நாராயணன், ஆர்ஜே பாலாஜியின் அடுத்தப் படத்தில் இருப்பது மகிழ்ச்சி என்றும் திறமையான இயக்குநரான அவருடன் பணியாற்றுவது மகிழ்ச்சி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.