புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்ட பின்னர் முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று முற்பகல் 10 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.
இதன்போது புதிய பிரதி சபாநாயகருக்கான தெரிவு இடம்பெறவுள்ளதுடன், இதற்காக ஐக்கிய மக்கள் சக்தி, நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்னவின் பெயரை பரிந்துரைக்கவுள்ளது.
அத்துடன் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அஜித் ராஜபக்ஷவின் பெயரை முன்வைக்க தீர்மானித்துள்ளது.
இதேவேளை, பிரதி சபாநாயகர் தெரிவின் போது ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிப்பதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்தியக் குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அதன் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதேவேளை, இன்று நாடாளுமன்ற அமர்வு ஆரம்பாகும் சந்தர்ப்பத்தில் உறுப்பினர்களுக்கான ஆசனத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படும்.
இதற்கமைய, இதுவரையில் எதிர்கட்சி ஆசனத்தில் இருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆளும் தரப்பின் பக்கம் ஆசனம் வழங்கப்படவுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.