- Advertisement -
திரைத் துறையில் தன்னிகரற்ற சேவையாற்றி வரும் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்தியத் திரை உலகினருக்குக் கிடைக்கும் கெளரவச் சின்னமாகவும், வாழ்நாள் அங்கீகாரமாகவும் இவ்விருது கருதப்படுகிறது.
சத்யஜித் ரே, பிருத்விராஜ் கபூர், நாகிரெட்டி, எல்.வி. பிரசாத், ராஜ்கபூர், லதா மங்கேஷ்கர், சிவாஜி கணேசன், கே. பாலசந்தர், கே. விஸ்வநாத் உள்ளிட்ட திரையுலக ஜாம்பவான்கள் பலரின் புகழுக்கு தாதா சாகேப் விருது மேலும் பெருமை சேர்த்துள்ளது.
கடைசியாக 2018-ல் பிரபல நடிகர் அமிதாப் பச்சனுக்கு பால்கே விருது அளிக்கப்பட்டது.
2019-ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது ரஜினிகாந்துக்குச் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்தியத் திரைத்துறையில் ரஜினியின் சாதனையைப் பாராட்டி இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
1982-ல் எல்.வி. பிரசாத் பால்கே விருதைப் பெற்றார். 1996-ல் சிவாஜி கணேசனுக்கும் 2010-ல் கே.பாலசந்தருக்கும் இந்த விருது அளிக்கப்பட்டது.
இதையடுத்து பால்கே விருதைப் பெற்றுள்ள 4-வது தமிழ்த் திரைப்படக் கலைஞர் என்கிற பெருமை ரஜினிகாந்த்துக்குக் கிடைத்துள்ளது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.