தமிழ் சினிமா நடிகர்களில் போலீஸ் கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தும் நடிகர்களில் முக்கியமானவர் விஜயகாந்த்.
தான் நடித்துள்ள படங்களில் 20க்கும் மேற்பட்ட படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் ஏராளமான வெற்றிப்படங்களையும் கொடுத்துள்ளார் விஜயகாந்த்.
ஆக்ஷன் படங்களில் பட்டையை கிளப்பும் விஜயகாந்த் பல்வேறு விருதுகளையும் குவித்துள்ளார். ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு அடுத்தப்படியாக ஏராளமான ரசிகர்களை கொண்டிருப்பவர் விஜயகாந்த்.
ஏழை எளிய மக்களுக்கு உதவும் மனம் கொண்ட விஜயகாந்த் அரசியலிலும் தீவிரமாக உள்ளார். 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்ட சபை தேர்தலில் திமுகவை வீழ்த்தி தமிழக சட்டசபையின் பிரதான எதிர்கட்சி தலைவராக பதவி வகித்தார் விஜயகாந்த்.
தேர்தர் பிரச்சார கூட்டங்களில் சிம்மக்குரலில் அவர் கர்ஜித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்தார். கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள விஜயகாந்த், பொது நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பதில்லை.
அவ்வப்போது அமெரிக்கா சென்றும் சிகிச்சை பெற்று வருகிறார் விஜயகாந்த். இந்நிலையில் நடிகர் விஜயகாந்தின் லேட்டஸ்ட் போட்டோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அதில் உடல் இளைத்துப்போய் வயதான தோற்றத்தில் உள்ளார் விஜயகாந்த். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள், இந்த மனிதருக்கா இப்படி ஒரு நிலைமை? பார்க்கவே மனம் வலிக்கிறது என கலங்கியுள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.