வலப்பனை – மந்தாரம்நுவர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எலமுள்ள தோட்டத்தில் நேற்று (05) மாலை தமிழ் மற்றும் சிங்கள இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட சிங்கள இளைஞர் மந்தார நுவர பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த இளைஞர்கள் மீது தாக்குதலை மேற்கொண்ட நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.பி.ரத்நாயக்காவின் சகோதரர் கீர்த்தி குடாபண்டார ரத்நாயக்கா, ஹங்குராங்கெத்த பிரதேச சபையின் மொட்டு கட்சி உறுப்பினர் அஜீத் மற்றும் பிரதேச வாசியான சிந்திகக ஆகியோரை இன்று அதிகாலை நான்கு மணியளவில் கைது செய்துள்ளதாக மந்தாரம்நுவர பொலிஸார் தெரிவித்தனர்.
அதேநேரத்தில் இந்த தாக்குதல் சம்பவத்தினால் மந்தாரம்நுவர,எலமுள்ள,மற்றும் கபரகலை வாசிகள் என 200 க்கு மேற்பட்டவர்கள் மந்தாரம்நுவர தியகலஹீனையில் அமைந்துள்ள முன்னால் அமைச்சர் சி.பி.ரத்நாயக்காவின் சகோதரரின் வீடு,பிரதேச சபை உறுப்பினரின் வீடு மற்றும் வாகனம் ஒன்றை தாக்கி சேதப்படுத்தியும் உள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
எலமுள்ளை தோட்டத்தில் மரண வீடுக்கு அஞ்சலி செலுத்த சென்ற நிலையில், எலமுள்ள மற்றும் கபரகலை வாசிகளுக்கும், கைது செய்யப்பட்டவர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இவ் வாக்குவாதம் சண்டையாக மாறி கைகலப்பாகியதில் இரண்டு இளைஞர்களை நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.பி.ரத்நாயக்காவின் சகோதரர் கீர்த்தி குடாபண்டார ரத்நாயக்கா, ஹங்குராங்கெத்த பிரதேச சபையின் மாட்டு கட்சி உறுப்பினர் அஜீத் மற்றும் பிரதேச வாசியான சிந்திகக ஆகியோர் தாக்கியுள்ளனர்.
இதன் பின் ஒன்று சேர்ந்த 200 க்கு மேற்பட்ட பிரதேச வாசிகள் இவர்களை விரட்டியதுடன் இவர்களின் வீடுகள், வாகனம் ஒன்றையும் தாக்கி உடைத்துள்ளனர்.
அதே நேரத்தில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை உயர் மட்ட பொலிஸார் மேற்கொள்வதுடன் கைது செய்யப்பட்டுள்ளவர்களை வலப்பனை நீதிமன்ற மன்றில் செய்யவும் நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.