Tamil Seithi

பால்மா விலை மீண்டும் அதிரடியாக அதிகரிப்பு

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
பால்மா விலை

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை நாளை (31) முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, 400 கிராம் பால்மா பொதியொன்றின் விலை 60 ரூபாயினாலும், ஒரு கிலோகிராம் பால்மா பொதியொன்றின் விலை 150 ரூபாயினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மா பொதியொன்று 1,345 ரூபாய்க்கும், 400 கிராம் பொதியொன்று 540 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் எனப் பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.