2022 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் பல கிரகங்கள் ராசியை மாற்றுகின்றன. இம்மாதிரியான நிகழ்வு மிகவும் அரிதானது. ஏனெனில் இது நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னரே நடக்கும்.
இந்த ஏப்ரல் மாதத்தில் செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, சூரியன், ராகு, கேது ஆகிய 9 கிரகங்களுமே ராசியை மாற்றுகின்றன. கிரகங்களின் ராசி மாற்றங்கள் மனிதர்களின் வாழ்க்கையை பாதிக்கிறது.
ஆனால் ஒவ்வொருவருக்கும் பலன்கள் வேறுபடும். கிரக மாற்றங்களால் பெறும் பலன்கள் நல்லதாகவோ, கெட்டதாகவோ இருக்கலாம்.
அதுவும் குருவின் ராசி மாற்றம் பலரது வாழ்க்கையையே முற்றிலும் மாற்றக்கூடியது. குரு ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், அவர் வாழ்க்கையில் அனைத்து மகிழ்ச்சியையும் பெறுவார். இப்படிப்பட்ட குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதற்கு சுமார் ஒரு வருடம் ஆகும்.
அந்த வகையில் குரு 2022 ஏப்ரல் 13 ஆம் தேதி கும்பத்தில் இருந்த தனது சொந்த ராசியான மீன ராசிக்கு இடம் மாறினார். இந்த ராசியில் 2023 ஏப்ரல் 22 வரை இருப்பார். குரு தனது சொந்த ராசிக்குள் நுழைந்திருப்பதால், 6 ராசிக்காரர்களின் நிதி நிலைமை மேம்பட்டு பணக்காரராகும் வாய்ப்புள்ளது. இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மீன ராசிக்கு செல்லும் குருவால், மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் ஆரம்பமாகிறது. உத்தியோகத்தில் பதவி உயர்வு பெற வாய்ப்புள்ளது. நிதி நிலை நன்றாக இருக்கும். நல்ல காலமாக இருந்தாலும், நீதிமன்ற வழக்குகளில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இக்கால கட்டத்தில் சொத்து அல்லது நிலத்தின் மூலம் உங்களுக்கு நல்ல ஆதாயங்கள் கிடைக்கும். வெளிநாட்டு வேலைகளால் நல்ல ஆதாயத்தைப் பெறக்கூடும்.
ரிஷபம்
நிதியைப் பொறுத்தவரை, ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி காலம் மிகவும் நன்றாக இருக்கும். நல்ல பண வரவுடன் இருப்பார்கள். இக்காலத்தில் உங்களைத் தேடி அதிக பணம் வரக்கூடும். இது உங்கள் சொத்துக்களின் அளவை அதிகரிக்கும். இருப்பினும், சற்று எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
சிம்மம்
குரு மீன ராசியில் இருப்பதால், சிம்ம ராசிக்காரர்களின் செல்வம் அதிகரிக்கும். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது. எவ்வளவு வரவு இருந்தாலும், அதற்கேற்ப செலவுகளும் இருக்கும். நீங்கள் செல்வந்தர் ஆக விரும்பினால், தேவையற்ற செலவுகளில் கவனம் செலுத்தி, அதைக் கட்டுப்படுத்துங்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியானது வருமானத்தையும், லாபத்தையும் அதிகரிக்கும். கூட்டு வணிகம் செய்பவர்கள் ஏதேனும் பிரச்சனையை சந்தித்து வந்தால், இக்காலத்தில் அப்பிரச்சனை தீர்வுக்கு வரும். உங்கள் அறிவு மற்றும் புத்திசாலித்தனம் உங்கள் கௌரவத்தை அதிகரிக்கும். மேலும் பணிபுரிபவர்கள் நல்ல பதவி உயர்வையும் பெறலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2022 குரு பெயர்ச்சி நிதி ரீதியாக நன்றாக இருக்கும். நல்ல பலன்கள் கிடைக்கும். உங்கள் வருமானம் அதிகரிக்கும். உங்கள் சொத்துக்கள் அல்லது செல்வத்தை அதிகரிக்க உங்கள் அறிவைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.
கும்பம்
நிதி ரீதியாக கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி மிகவும் சூப்பராக இருக்கும். ஏனெனில் இக்காலத்தில் பண வரவு அதிகம் இருக்கும். இது உங்கள் நிதி நிலைமையை மேம்படுத்தும். நீங்கள் ஒரு நல்ல முதலீட்டாளர்களைத் தேடுகிறீர்களானால், வியாழனின் அருளால் இந்த காலகட்டத்தில் அதை எளிதாகக் காண்பீர்கள். இது உங்களை விரைவில் செல்வந்தராக்க உதவும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.