Sri Lanka News Live and Tamil Breaking News

இன்றைய ராசிபலன் (07 டிசம்பர் 2021) : நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கப்போகிறது!

0 18

- Advertisement -

மேஷம் – நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கப்போகிறது. இனிமையான நாளாக அமையும். நீங்கள் இருக்கும் இடத்தில் மதிப்பும், மரியாதையும் சிறப்பாக இருக்கும். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

தொழில் ரீதியாக நல்ல லாபமான நிலை இருக்கும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் மீது இருந்த பழிச்சொற்கள் நீங்கி நல்ல பெயர் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷங்கள் அதிகரிக்கும். நவீனமான பொருட்கள் கூட வாங்கும் வாய்ப்பும், நிலையும் இருக்கும்.

ரிஷபம் – ரிஷப ராசிக்கு இன்று முழுவதும் சந்திராஷ்டமம் இருப்பதால் பொறுமையும், நிதானமாக செயல்படுவது அவசியம். தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படும். எளிதில் முடியக்கூடிய காரியங்கள் கூட சற்று இழுபறியாக இருக்கும். எந்த செயலைச் செய்தாலும் சற்று எச்சரிக்கையுடன் செய்வது அவசியம்.

முடிந்தவரை மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது அவசியம். அதிலும் குறிப்பாக உடன் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்லவும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். அதிலும் குறிப்பாக எதிலும் சற்று கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. பயணத்தை தவிர்ப்பது நல்லது.

மிதுனம் – தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படலாம். எளிதில் முடியக்கூடிய வேலைகள் கூட தடைப்படக்கூடிய நிலை இருக்கும். பண வரவு சிறப்பாக இருந்தாலும், எதையும் எதிர்கொள்ளக்கூடிய மன உறுதி உண்டாகும். உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வதால் அனுகூல பலனைப் பெறலாம்.

பொதுவாக சிக்கனமாக இருப்பது. மற்றவர்களின் செயல்களில், விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.

கடகம் – உங்களுடைய் செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். எடுக்கும் முயற்சிக்கு ஒரு வளமான பலன்கள் கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள். உங்கள் மீதான மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். நண்பர்கள் மூலமாக அனுகூல பலன் கிடைக்கும்.

தொழில் லாபகரமான, முன்னேற்ற நிலை இருக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் ஆதரவாக இருப்பதால் நீங்கள் நினைத்த மேன்மையை அடையலாம்.

சிம்மம் – பல்வேறு மேன்மைகளை அடையக்கூடிய நாள். நண்பர்கள் மூலமாக சிறப்பான ஆதரவும், அன்பும் கிடைக்கும். பண வரவுகள் மிக சிறப்பாக இருக்கும். சகல விதத்திலும் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கக்கூடிய நாள்.

உங்களுக்கான மதிப்பும், மரியாதையும் சிறந்த முறையில் கிடைக்கும். கடந்த கால சோதனைகள், வீண் செலவுகள் நீங்கி உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்.

கன்னி – உங்களுடைய வளமும், வலிமையும் அதிகரிக்கக்கூடிய நாள். தொழில் ரீதியாக ஒரு நல்ல வளமான பலன் கிடைக்கும். நினைத்ததெல்லாம் நடக்கும். நல்ல நட்புகள் கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கும். அரசு தொடர்பான வேலைகள் கூட அனுகூலமாக முடியும். உத்தியோகஸ்தர்களின் திறமை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும்.

கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள். குடும்பத்தில் மங்களகரமான காரியங்கள் சிறப்பாக நிறைவேறும்.

துலாம் – உங்களுக்கு பல்வேறு மேன்மைகள் இன்றைய நாளில் ஏற்படும். நண்பர்கள் ஆதரவு இருக்கும். உத்தியோகத்தில் ஏற்றம் மிகுந்த நாளாக இருக்கும். தொழில் ரீதியாக பார்த்தால் பேச்சில் சற்று கவனமாக இருந்தால் அனுகூலமான நல்ல பலனைப் பெறலாம். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது மிக மிக அவசியம்.

பண வரவு சிறப்பாக இருக்கும் என்றாலும். செலவில் கவனமாக இருப்பதும், உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக செயல்படுவது அவசியம்.

விருச்சிகம் – உங்களுக்கு சகலவிதத்திலும் மேன்மையான பலன்கள் கிடைக்கும். கடந்த சில நாட்களாக இருந்த அலைச்சல், சிக்கல்கள் நீங்கி நல்ல பலனை அடைவீர்கள். பண வரவு சிறப்பாக இருக்கும். உங்களின் தேவைகளை எல்லாம் சிறப்பாக நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

தொழில், வியாபார ரீதியாக ஒரு வளமான பலன்களை அடைவீர்கள். உடல் ஆரோக்கிய ரீதியாக இருந்த சிறிய பிரச்னைகள் கூட முழுமையாக நீங்கி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய நிலை ஏற்படும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். பிள்ளைகள் வாயிலாக கூட நல்ல செய்திகளைக் கேட்பீர்கள்.

தனுசு – உங்களுக்கு பண வரவு சிறப்பாக இருந்தாலும், வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படக்கூடும். தேவையற்ற வீண் அலைச்சல்கள் ஏற்படக்கூடும் என்பதால் எதிலும் சற்று பொறுமையோடு இருப்பதும், ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொள்வதும் நல்லது. அதிலும் குறிப்பாக குடும்பத்தில் கணவன் – மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. சிலருக்கு தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும். முடிந்தவரை உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லது.

தொழிலில் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் நீங்கள் முன்னின்று செய்யக்கூடிய வேண்டி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும். இருப்பினும் அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள்.

மகரம் – இன்று உங்களின் வளமும், வலிமையும் கூடக்கூடிய நாளாக இருக்கும். மறைமுக எதிர்ப்புகள், எதிரிகள் விலகி ஒரு வளமான பலன் கிடைக்கும். நல்ல வாய்ப்புகள் தேடி வரும். இருந்த பிரச்னைகள் விலகி நன்மை உண்டாகும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

பெரிய மனிதர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். கடந்தகால சோதனைகள் எல்லாம் விலகி ஒரு சாதகமான பலன் கிடைக்கும். ஆரோக்கியம் சிறக்கும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.

கும்பம் – உங்களுக்கு இருந்த அலைச்சல், மன அழுத்தம் நீங்கி ஒரு வளமான பலனை அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சந்தோஷமும் ஏற்படும். உங்களின் செயலில் இருந்த தடைகள், சிக்கல்கள் தீர்ந்து அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பிள்ளைகள் மூலமாக சாதகமான பலன்கள் கிடைக்கும்.

கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள்.சிலருக்கு வெளியூர் மூலமாக சுப செய்திகள் கிடைக்கும். தொழில் ரீதியாக பார்க்கும் போது உங்களின் வேலையாட்களை அனுசரித்துச் செல்வதால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் பேசும் போது சற்று நிதானத்துடன் பேசுவது அவசியம்.

மீனம் – உங்களுக்கு தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படக்கூடும். நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில் தடையும், தடங்களும் ஏற்படலாம். அதுமட்டுமல்லாமல் ஆரோக்கிய ரீதியாக சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் அதில் கவனம் தேவை.

முடிந்த வரை மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. தொழிலில் புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். புதிய செயல்பாடுகளில் கவனமும், ஆலோசனையும் தேவை.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

Get real time updates directly on you device, subscribe now.

- Advertisement -

Leave a comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More