அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பா. ரஞ்சித். அதனை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் ‘மெட்ராஸ்’ படத்தை இயக்கினார்.
இந்தப்படங்களின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் கபாலி, காலா படங்களை இயக்கினார். பா.ரஞ்சித் இயக்கத்தில் கடைசியாக ஆர்யா நடிப்பில் ‘சார்பட்டா பரம்பரை’ படம் வெளியானது.
கடந்த ஜூலை 22 ஆம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான இந்தப்படத்தில் பசுபதி, அனுபாமா குமார், சஞ்சனா நடராஜன், சந்தோஷ் பிரதீப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மத்தியில் பலவித பாராட்டுக்களை பெற்ற இந்த படத்தை. தொடர்ந்து முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தில் ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்ற படத்தை இயக்கியுள்ளார் பா. ரஞ்சித்.
இந்தப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்தது. படப்பிடிப்பு நிறைவடைந்ததை, படப்பிடிப்பின் இறுதி நாளில் கேக் வெட்டி படக்குழு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.
இந்தப்படத்தில் இயக்குநர் பா. ரஞ்சித்தின் மனைவி அனிதா ரஞ்சித் காஸ்டியூம் டிசைனராக பணியாற்றியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘நட்சத்திரம் நகர்கிறது’ படப்பிடிப்பு முடிந்தது. இந்த படத்தில் நடிக்க கிடைத்த முதல் வாய்ப்புக்கு மிக்க நன்றி அன்புள்ள பா ரஞ்சித். கல்லூரி காலத்திற்குப் பிறகு உங்களுடன் பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.