ஸ்பாம் பாக்ஸில் கிடைத்த 3 மில்லியன் டாலர் லாட்டரி பரிசு … மகிழ்ச்சியில் அதிர்ந்த பெண்!

ஸ்பாம் பாக்ஸில் கிடைத்த 3 மில்லியன் டாலர் லாட்டரி பரிசு ... மகிழ்ச்சியில் அதிர்ந்த பெண்!

அதிர்ஷ்டம் கூரையை பிய்த்துக்கொண்டு கொடுக்கும் என்று சொல்வார்கள். ஆனால் சிலருக்கு அதிர்ஷ்டம் அமைதியாக அவர்களுடைய ஸ்பேம் மெயிலில் யாருக்கும் தெரியாமல் அமர்ந்திருக்கும்.

குப்பையில் கிடைத்த புதையல் என்று கூறுவது போல, டிஜிட்டல் உலகத்தில் ஸ்பாம் மெயில்கள் என்று கூறப்படும் குப்பை மெயில் பாக்ஸில் ஒரு அமெரிக்கப் பெண்ணுக்கு 3 மில்லியன் லாட்டரி ‌‌ கிடைத்த மின்னஞ்சல் ஒன்று டெலிவரி ஆகியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த லாரா ஸ்பியர்ஸ் என்ற பெண் 3 மில்லியன் டாலர் லாட்டரியில் வெற்றி பெற்றிருக்கிறார். ஆனால் வெற்றி பெற்ற மின்னஞ்சல் அவருடைய மின்னஞ்சல் இன்பாக்ஸில் டெலிவர் ஆகவில்லை. அதற்கு பதிலாக அவருடைய ஸ்பாம் பாக்ஸ் அதாவது பொதுவாக சந்தேகப்படும்படியான மெயில்களில் நேரடியாக ஸ்பாம் பாக்சிற்கு டெலிவரி ஆனது.

லாரா லாட்டரி வெற்றி பெற்ற செய்தியும் அவருடைய மின்னஞ்சலில் ஸ்பாம் பாக்ஸில் தான் காணப்பட்டுள்ளது. பொதுவாக ஸ்பேம் மெயில்களை படிக்கும் பழக்கம் பலருக்கும் கிடையாது. ஆனால் அதிர்ஷ்டவசமாக ஏதோ ஒரு மின்னஞ்சலை தேடி தன்னுடைய ஸ்பேம் பாக்ஸில் பார்க்கும் போது, லாராவுக்கு மூன்று மில்லியன் டாலர்கள் பரிசாக வெற்றி பெற்றிருப்பதை அறிந்திருக்கிறார்.

லாரா ஸ்பியர்ஸ் ஒக்லாந்து நாட்டில் மெகா மில்லியன் என்ற நிறுவனத்தில் ஒரு லாட்டரி டிக்கெட்டை வாங்கி இருக்கிறார். மிச்சிகம் லாட்டரியின் லாட் அறிவிப்பின் படி, லாராவின் டிக்கெட் சுமார் 31 ஆம் தேதி டிரா செய்யப்பட்டது.

அதில் 5 வெள்ளை பந்துகள் டிரா செய்யப்பட்டு அதில் இருந்த ஐந்து எண்களும் லாராவின் எங்களுடன் பொருந்தியுள்ளது. அதன் படி, லாராவின் லாட்டரி தொகை 1 மில்லியன் டாலர். ஆனால், லாரா மெகாபிளையேர் என்பதையும் வைத்திருந்ததால் அந்த பரிசு மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டு லாராவுக்கு 3 மில்லியன் டாலர்கள் பரிசாகக் கிடைத்தது. ஆனால், வெற்றி பெற்ற விவரம் மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்ட போது, அது லாராவின் ஸ்பாம் பாக்ஸில் தான் இருந்தது.

லாட்டரி பற்றி எப்படி தெரிந்து கொண்டார் என்று லாரா கூறுகையில், ‘மெகா மில்லியன் ஜாக்பாட் லாட்டரி தொகை அதிகரித்து வருவதாக ஃபேஸ்புக்கில் அதைப் பற்றிய விளம்பரத்தைப் பார்த்தேன். எனவே நானும் ஒரு கணக்கைத் தொடங்கி எனக்கும் ஒரு டிக்கெட் வாங்கினேன். பிறகு பெரிதாக கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டேன்.

திடீரென்று வேறு ஏதோ ஒரு மின்னஞ்சலை தேடிக்கொண்டிருக்கும் பொழுது என்னுடைய ஸ்டாப் பாக்ஸில் லாட்டரி பரிசு வென்றிருப்பதாக ஒரு மெயில் வந்திருந்தது. அந்த மின்னஞ்சலைப் படிக்கும்போது என்னுடைய லாட்டரி கணக்கில் லாகின் செய்து பார்த்ததும், உண்மையிலேயே நான் அதிர்ச்சி அடைந்துவிட்டேன் நிஜமாகவே நான் மூன்று மில்லியன் டாலர் பரிசு வெற்றி பெற்று இருந்தேன்’ என்று நம்பவே முடியாதவாறு தெரிவித்திருந்தார்.

லாட்டரி பரிசைப் பெற நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு சென்ற லாரா பரிசுப் பணத்தை வைத்து என்னவெல்லாம் செய்யப் போவதாக திட்டங்களையும் தெரிவித்தார். குடும்பத்தினருக்கும் வழங்கப்போவதாகவும், மற்றும் வேலையிலிருந்து விரைவில் ஓய்வு பெறுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

மின்னஞ்சலில் ஸ்பாம் பாக்ஸ் அமைப்பையும் மாற்றி இருப்பதாகத் தெரிவித்தார். ஒருவேளை அவருடைய ஸ்பாம் பாக்ஸைப் பார்க்காமல் இருந்தால், அவருக்கு கோடிக்கணக்கில் பரிசு வென்றிருப்பது தெரியாமலே போயிருக்கும்.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *