- Advertisement -
அழகிகள் பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் 2021ஆம் ஆண்டுக்கான உலக அழகி போட்டி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டுக்கான உலக அழகிப்போட்டி நேற்று தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. அமெரிக்க தீவானா ப்யூர்ட்டோ ரிக்கோவில் இந்த போட்டி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையல் உலக அழகி போட்டியில் பங்கேற்க இருந்த பல அழகிகள் மற்றும் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் என 17 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.
இதில் இந்தியா சார்பில் பங்கேற்கும் மாடல் அழகி மானசா வாரனாசியும் அடங்குவார். போட்டியாளர்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அழகிப் போட்டி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.
போட்டி தொடங்க சில மணி நேரங்களே இருந்த நிலையில் நேற்று இரவு இந்த அறிவிப்பை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டனர்.
இது தொடர்பாக மிஸ் வோர்ல்டு இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, போட்டியாளர்களிடையே அதிகரித்து வரும் கோவிட் தொற்றை மனதில் வைத்து, மிஸ் வேர்ல்ட் அமைப்பு மிஸ் வேர்ல்ட் இறுதிப் போட்டியை ஒத்திவைக்கும் முடிவை எடுத்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.
போட்டியாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அழகிப்போட்டியை நடத்தினால் டிரெஸிங் ரூம் மற்றும் மேடை அணிவகுப்பின் மூலம் கொரோனா தொற்று மேலும் அதிகரிக்கும் ஆபத்து உள்ளதால் போட்டியை ஒத்தி வைக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அடுத்த மூன்று மாதங்களுக்குள் அழகிப் போட்டி நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2020 மிஸ் வோர்ல்டு இந்தியா அழகிப் போட்டியில் பட்டம் வென்றவர் மானசா வாரனாசி.
இவர் சர்வதேச அழகிப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க இருந்தார். இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நாடு திரும்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.