- Advertisement -
ஓமிக்ரான் கிருமியால் பீதியடையத் தேவையில்லை என்று உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது சுமார் 40 நாடுகளில் ஓமிக்ரான் சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
ஓமிக்ரான் கிருமிக்கு எதிராகத் தடுப்புமருந்தைச் சரிசெய்ய வேண்டுமா என்பதை இப்போது கூற இயலாது என்று நிறுவனத்தின் மூத்த அறிவியலாளர் சௌமியா சுவாமிநாதன் கூறியுள்ளார்.
தற்போது பயன்பாட்டில் இருக்கும் தடுப்புமருந்துகளின் செயல்திறனைச் சந்தேகிக்க எந்தக் காரணமும் இல்லை என்றார் அவர்.
இதுவரை உலக அளவில் ஓமிக்ரான் கிருமித்தொற்றால் யாரும் உயிரிழக்கவில்லை.
ஆகவே அவ்வகைக் கிருமியால் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடிய சாத்தியத்தைப் புரிந்துகொள்ள இன்னும் கூடுதல் அவகாசம் தேவை என்று நிறுவனம் தெரிவித்தது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.