சீன ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 தொழிலாளர்கள் பலி

சீன ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 தொழிலாளர்கள் பலி

சீனாவில் உள்ள மங்கோலியா பிராந்தியத்தில் உள்ள சோங்காவ் நகரில் ரசாயன தொழிற்சாலை ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் இந்த தொழிற்சாலை வழக்கம்போல் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது.

அப்போது உள்ளூர் நேரப்படி காலை 11 மணியளவில் தொழிற்சாலையில் பயங்கர வெடிப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து அங்கு தீப்பற்றியது. மளமளவென எரிந்த தீ தொழிற்சாலை முழுவதும் பரவியது.

இதனால் பீதியடைந்த தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டு தொழிற்சாலையை விட்டு ஓட்டம் பிடித்தனர். அதிவேகத்தில் பரவிய தீ தொழிற்சாலையின் நாலாபுறமும் சூழ்ந்ததால் தொழிலாளர்கள் பலர் உள்ளே சிக்கிக் கொண்டனர்.

தீ விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

ஆனாலும் தீயின் கோரப்பிடியில் சிக்கி தொழிலாளர்கள் 4 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 தொழிலாளர்கள் பலத்த தீக்காயம் அடைந்தனர்.

அவர்கள் உடனே மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *