Fri, May27, 2022
Homeமுக்கிய செய்திகள்அவுஸ்திரேலியா தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

அவுஸ்திரேலியா தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட T20I தொடருக்கான 20 பேர்கொண்ட குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை அணியில், T20 உலகக்கிண்ண குழாத்தில் இடம்பிடித்திருந்த குசல் பெரேரா, உப தலைவர் தனன்ஜய டி சில்வா, ஓய்வை அறிவித்து மீண்டும் ஓய்வுபெறும் முடிவை திரும்பப்பெற்றிருந்த பானுக ராஜபக்ஷ மற்றும் அகில தனன்ஜய ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

குசல் பெரேரா உபாதை காரணமாக அணியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், தனன்ஜய டி சில்வாவுக்கு பதிலாக உப தலைவராக சரித் அசலங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

சரித் அசலங்க உப தலைவராக செயற்பட, அணியின் தலைவராக தசுன் ஷானக தொடர்ந்தும் செயற்படவுள்ளார்.

T20 உலகக்கிண்ணத்தில் மிகச்சிறப்பாக பிரகாசித்திருந்த பானுக ராஜபக்ஷ உடற்தகுதியை நிரூபிக்க தவறியதால், அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை சில புதிய வீரர்களுக்கான வாய்ப்பு அவுஸ்திரேலிய தொடரில் வழங்கப்பட்டுள்ளதுடன், தடைக்கு முகங்கொடுத்து மீண்டும் திரும்பியுள்ள குசல் மெண்டிஸ் மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியோர் அவுஸ்திரேலிய தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பை பெற்றுள்ளனர்.

இதில், குசல் மெண்டிஸ் ஜிம்பாப்வே தொடரில் விளையாடியிருந்ததுடன், தனுஷ்க குணதிலக்க லங்கா பிரீமியர் லீக்கை தொடர்ந்து அணியில் இடம்பிடித்துள்ளார். எவ்வாறாயினும், நிரோஷன் டிக்வெல்லவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

புதிய வீரர்களாக வேகப்பந்துவீச்சாளர் நுவான் துஷார இடம்பெற்றுள்ளதுடன், கொவிட்-19 தொற்று காரணமாக ஜிம்பாப்வே தொடரை தவறவிட்டிருந்த ஜனித் லியனகே மற்றும் கமில் மிஷார ஆகியோர் தேசிய அணியின் வாய்ப்பை மீண்டும் பெற்றுள்ளனர்.

இவர்களுடன் வேகப்பந்துவீச்சாளர் ஷிரான் பெர்னாண்டோ அணியில் இணைக்கப்பட்டுள்ளதுடன், விளையாட்டுத்துறை அமைச்சரின் அனுமதிக்காக காத்திருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது.

இலங்கை அணி விவரம்

தசுன் ஷானக (தலைவர்), சரித் அசலங்க (உப தலைவர்), அவிஷ்க பெர்னாண்டோ, பெதும் நிஸ்ஸங்க, தனுஷ்க குணதிலக்க, குசல் மெண்டிஸ், தினேஷ் சந்திமால், சாமிக்க கருணாரத்ன, ஜனித் லியனகே, கமில் மிஷார, ரமேஷ் மெண்டிஸ், வனிந்து ஹஸரங்க, லஹிரு குமார, நுவான் துஷார, துஷ்மந்த சமீர, பினுர பெர்னாண்டோ, மஹீஷ் தீக்ஷன, ஜெப்ரி வெண்டர்சே, பிரவீன் ஜயவிக்ரம, ஷிரான் பெர்னாண்டோ

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

spot_img
spot_img

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க