- Advertisement -
தனியான உலகம் முழுவதும் விமானத்தில் பயணம் செய்யும் 19 வயதான இளம் பெண் விமானி Zara Rutherford இரத்மலானை கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளார்.
பெல்ஜியம் மற்றும் பிரிட்டன் வம்சாவளி விமானி Zara Rutherford, 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் திகதி முதல் தனியாக விமானத்தில் உலகத்தை சுற்றி வருகிறார்.
51 ஆயிரம் கிலோ மீற்றர் தூரம் விமானத்தில் பயணிக்க அவர் உத்தேசித்துள்ளார். 5 கண்டங்கள் மற்றும் 52 நாடுகளை கடந்து எதிர்வரும் ஜனவரி மாதம் நடுப்பகுதியில் பயணத்தை முடிக்க திட்டமிட்டுள்ளார்.
56 வது தரிப்பிடமாக அவர் இலங்கை வந்துள்ளார். Zara Rutherford பயணிக்கும் விமானம் ஐரோப்பாவில் தயாரிக்கப்பட்ட உயர் செயற்திறன் கொண்ட ultralight விமானமாகும்.
இந்த விமானம் மணிக்கு 300 கிலோமீற்றர் வேகத்தில் பறக்கக் கூடியது. நீண்ட தூர பயணத்திற்காக இந்த விமானம் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது.
இரத்மலானை கொழும்பு சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் Zara வை வரவேற்றதுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.