Tuesday, May 21, 2024
Homeமுக்கிய செய்திகள்சாய்ந்தமருதில் மூதாட்டி கொல்லப்பட்டு நகைகள் கொள்ளை 

சாய்ந்தமருதில் மூதாட்டி கொல்லப்பட்டு நகைகள் கொள்ளை 

HTML tutorial

பிரதேசத்திலுள்ள வீடொன்றில் தனியாக வசித்து வந்த 85 வயது மூதாட்டியை கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த தங்க  ஆபரணங்களை கொள்ளையடிச் சென்றுள்ள சம்பவம், இன்று வியாழக்கிழமை (27) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல். சம்சுதீன் தெரிவித்தார்.

சாய்ந்தமருது-15 பிரிவு புதுப்பள்ளி வீதியைச் சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தாயாரான சுலைமான் செய்யது புஹாரி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

சம்பவதினமான இன்று காலை மூதாட்டியின் நான்காவது மகன் வழமைபோல காலை உணவை தாயாருக்கு கொண்டு சென்ற போது, தயார் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதையடுத்து, பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸாரின் விசாரணையில் மூதாட்டி தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாகவும் அவரிடம் இருந்த தங்க ஆபரணங்களை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

RELATED ARTICLES

இதயும் பாருங்க

இதயும் பாருங்க

சற்று முன்