ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 200 ரூபாயால் அதிகரிக்க உள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, ஒரு கிலோகிராம் பால்மாவின் விலை 1,145 ரூபாயாக அதிகரிக்கும் என அந்த சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய கூறியுள்ளார்.
இந்த விலை அதிகரிப்பு தொடர்பான யோசனை எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவை அங்கீகாரத்தின் பின்னர், அடுத்த வாரத்திற்குள் பால்மா தட்டுப்பாடு தீர்க்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
துறைமுகத்தில் தேங்கியுள்ள பால்மாவை விடுவித்துக் கொள்வதற்காக டொலர் தட்டுப்பாடு தொடர்ந்தும் நிலவுவதாக சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய கூறியுள்ளார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.