ஒரே நேரத்தில் 2 வகை புற்றுநோய்
முன்னாள் டென்னிஸ் வீராங்கனை மார்ட்டினா நவ்ரதிலோவா, தொண்டை மற்றும் மார்பக புற்றுநோயால் அவதியுற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
டென்னிஸில் 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற வீராங்கனை மார்டினா நவ்ரதிலோவா, 1978 மற்றும் 1990-களுக்கு இடையில் 9 விம்பிள்டன் ஒற்றையர் பட்டங்களை வென்று சாதனை படைத்தார்.
தற்போது 66 வயதாகும் மார்டினா, ஓய்வு பெற்ற பின்னர் வர்ணனையாளராக மாறினார். இந்நிலையில், சமீபத்தில் உடல் பரிசோதனை செய்ததில், இவருக்கு தொண்டை மற்றும் மார்பகத்தில் புற்றுநோய் ஆரம்ப நிலையில் இருப்பது தெரியவந்தது.
இந்த மாத இறுதியில் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு மார்டினா செல்ல உள்ளார்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM – இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/SeithiLK
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.