அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலிரண்டு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுடன் சர்வதேசக் கிரிக்கெட்டிலிருந்து மேற்கிந்தியத் தீவுகளின் சகலதுறைவீரர் அன்ட்ரே ரஸல் ஓய்வு பெறவுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் மாத்திரமே விளையாடி வரும் 37 வயதான ரஸல், சர்வதேச கிரிக்கெட் சபையின் அடுத்த இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடருக்கு ஏழு மாதங்கள் இருக்கையில் ஓய்வு பெறவுள்ளார்.
இதுவரையில் ஒரு டெஸ்ட், 56 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், 84 இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் ரஸல் விளையாடியுள்ளார்.
கடந்த 2012, 2016ஆம் ஆண்டு இருபதுக்கு – 20 உலகக் கிண்ணங்களை வென்ற மேற்கிந்தியத் தீவுகளின் குழாமில் ரஸல் இடம்பெற்றிருந்தார்.