அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற குவாலிபயர் 2 ஆடுகளம் பேட்ஸ்மேனுக்கு சாதகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. அதைப் போல் பேட்டிங்குக்கு நன்கு ஒத்துழைத்த போதிலும், ஆர்சிபி பேட்ஸ்மேன்கள் தவறான ஷாட் தேர்வுகளாக தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
இறுதியில் பெரிய அளவில் ஸ்கோர் அடிக்க யாரும் இல்லாத நிலையிில் 157 ரன்கள் குவித்தது. எளிய இலக்காக இருந்தாலும் நிதானத்தை கடைப்பிடிக்காமல் ராயல்ஸ் பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலிருந்து அதிரடி காட்ட தொடங்கினார்கள். இளம் பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் 21 ரன்கள் என அதிரடி காட்டிவிட்டு கிளம்பினார்.
சீசன் முழுக்க பெரும்பாலான போட்டிகளில் பேட்டிங்கில் முழு வீச்சில் ஆதிக்கம் செலுத்தி வந்த பட்லரும், ஒரு விக்கெட் வீழ்ந்த பின்னரும் தனது அதிரடியை தொடர்ந்தார். அவர் இவ்வாறு விளையாடியதால் வழக்கத்துக்கு மாறாக கேப்டன் சஞ்சு சாம்சன் நிதானத்தை கடைப்பிடித்தார்.
எந்தவொரு இடத்தல் ரன் குவிப்பில் சுணக்கம் ஏற்படாதவாறு பட்லர் – சாம்சன் இணை சீராக விளையாடி வந்தனர். சஞ்சு சாம்சன் 23 ரன்களில் வெளியேறினார். ஆரம்பத்தில் இருந்தே அதிரடி காட்டி வந்த ஜோஸ் பட்லர், அரைசதத்தை கடந்து நடப்பு சீசனில் 4வது சதத்தை பூர்த்தி செய்தார்.
18.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து, ராயல்ஸ் அணி அமோக வெற்றியுடன் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
ஆர்சிபி ஸ்டிரைக் பெளலர்களான ஹசில்வுட், ஹசரங்கா ஆகியோர் தங்கள் பணியை சிறப்பாக செய்தனர். இருவரும் முறையே 2/23, 1/26 என விக்கெட்டுகளை வீழ்த்தி ரன்களும் வாரி வழங்காமல் கட்டுப்படுத்தினர்.
முகமது சிராஜ் என்ற சுமையை ஆர்சிபி அணி இன்னும் எவ்வளவு ஆண்டுகள் சுமக்க இருக்கிறதோ என்பதை காலம்தான் பதில்சொல்ல வேண்டும். பெளலிங்கில் எதிரணி ரன் மெசினாகவே தொடர்ந்து வருகிறார். இந்தப் போட்டியில் 2 ஓவர்கள் வீசி 31 ரன்கள் என வழங்கினார்,
இந்தப் போட்டியில் எந்த சந்தேகமும் இல்லாமல் சதமடித்து அணியை வெற்றி பெற வைத்த ஜோஸ் பட்லருக்கு ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.
இதையடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.