சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் முதலாமிடத்துக்கு இங்கிலாந்தின் ஜோ றூட் முன்னேறியுள்ளார்.
இந்தியாவுக்கெதிரான மூன்றாவது டெஸ்டில் 144 ஓட்டங்களைப் பெற்றமையைத் தொடர்ந்தே இரண்டாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி முதலாமிடத்தையடைந்துள்ளார்.
இதேவேளை மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான மூன்றாவது டெஸ்டில் 53 ஓட்டங்களைப் பெற்ற அவுஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித், ஐந்தாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி நான்காமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
ஜோ றூட், 2. கேன் வில்லியம்சன், 3. ஹரி ப்றூக், 4. ஸ்டீவன் ஸ்மித், 5. யஷஸ்வி ஜைஸ்வால், 6. தெம்பா பவுமா, 7. கமிந்து மென்டிஸ், 8. றிஷப் பண்ட், 9. ஷுப்மன் கில், 10. ஜேமி ஸ்மித்.
மேற்குறிப்பிட்ட மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான டெஸ்டில் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அவுஸ்திரேலியாவின் ஸ்கொட் போலண்ட், 12ஆவது இடத்திலிருந்து ஆறு இடங்கள் முன்னேறி ஆறாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை
ஜஸ்பிரிட் பும்ரா, 2. ககிஸோ றபாடா, 3. பற் கமின்ஸ், 4. ஜொஷ் ஹேசில்வூட், 5. நொமன் அலி, 6. ஸ்கொட் போலண்ட், 7. மற் ஹென்றி, 8. நேதன் லையன், 9. மார்கோ ஜன்சன், 10. மிற்செல் ஸ்டார்க்.
இந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான டெஸ்டில் 27 ஓட்டங்களைப் பெற்றதோடு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அவுஸ்திரேலிய அணித்தலைவர் பற் கமின்ஸ், சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் ஐந்தாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி முதலாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை
இரவீந்திர ஜடேஜா, 2. மெஹிடி ஹஸன் மிராஸ், 3. வியான் முல்டர், 4. பற் கமின்ஸ், 5. மார்கோ ஜன்சன்.