ஐபிஎல் 15-வது சீசன் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடப்பு சீசனில் சென்னை, மும்பை அணிகள் புள்ளிப்பட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் உள்ளன.
குறிப்பாக, மும்பை அணி விளையாடியுள்ள 8 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில், ஐபிஎல் அணிகளின் விலை மதிப்பு பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:
மும்பை இந்தியன்ஸ் 9,962 கோடி ரூபாயுடன் முதலிடத்திலும், சென்னை அணி 8,811 கோடி ரூபாயுடன் 2-வது இடத்திலும் உள்ளது.
கொல்கத்தா 8,428 கோடி ருபாயுடன் 3-வது இடத்திலும், லக்னோ 8,236 கோடி ரூபாயுடன் 4-வது இடத்திலும் உள்ளது.
டெல்லி 7,930 கோடி ரூபாயுடன் 5வது இடத்திலும், பெங்களூரு 7,853 கோடி ரூபாயுடன் 6-வது இடத்திலும் உள்ளது.
ராஜஸ்தான் 7,662 கோடி ரூபாயுடன் 7-வது இடத்திலும், ஐதராபாத் 7,432 கோடி ரூபாயுடன் 8-வது இடத்திலும் உள்ளது.
பஞ்சாப் 7,087 கோடி ரூபாயுடன் 9-வது இடத்திலும், குஜராத் 6,512 கோடி ரூபாயுடன் 10-வது இடத்திலும் உள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.