ஹொங்கொங் தேசிய ஆடவர் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இலங்கையின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் கௌஷல் சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
2025 ஆசிய கிண்ணத்துக்கு ஹொங்கொங் தயாராகி வரும் நிலையில், அவரது நியமனம் ஒரு முக்கியமான நேரத்தில் வந்துள்ளது. செப்டம்பர் 9 ஆம் திகதி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியின் தொடக்க ஆட்டத்தில் அவர்கள் பங்கேற்க உள்ளனர்.
அதைத் தொடர்ந்து குழு பி பிரிவில் பங்களாதேஷ் மற்றும் இலங்கையுடன் குழு நிலை மோதல்களில் விளையாடவுள்ளது. கிரிக்கெட் அரங்கில் கௌஷல் சில்வா ஏராளமான அனுபவங்களை கொண்டுள்ளார்.
2011 மற்றும் 2018 க்கு இடையில், அவர் இலங்கைக்காக 39 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, ஒரு சிறந்த விக்கெட் கீப்பர்-தொடக்க வீரர் என்ற நற்பெயரைப் பெற்றார். தனது முதல் தர கிரிக்கெட் வாழ்க்கையில், 209 போட்டிகளில் 13,932 ஓட்டங்களை குவித்தார்.
இதில் 41 சதங்கள் அடங்கும் – அவற்றில் மூன்று சர்வதேச மட்டத்தில் பதிவு செய்யப்பட்டவை. 2019 இல் விளையாடுவதிலிருந்து ஓய்வு பெற்றதிலிருந்து, சில்வா இலங்கை, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா முழுவதும் பயிற்சியாளராக ஈடுபட்டுள்ளார். எனினும், இது ஒரு சர்வதேச அணியின் தலைமை பயிற்சியாளராக அவரது முதல் பணியாகும்.