- Advertisement -
பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறியது இமான் அண்ணாச்சி என உறுதியான தகவல்கள் கசிந்துள்ளன.
அதிக ரசிகர்களின் அன்பை பெற்று இருந்த இமான் அண்ணாச்சி இப்படி இந்த வாரம் திடீரென வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் ஜிபி முத்து கலந்து கொள்ளப் போவதாக தகவல்கள் முதலில் வெளியாகின. பின்னர், ஜிபி முத்து கலந்து கொள்ளவில்லை இமான் அண்ணாச்சி தான் கலந்து கொள்கிறார் என்கிற தகவல் வெளியானதும் ரசிகர்கள் ரொம்பவே ஆச்சர்யப்பட்டனர். இமான் அண்ணாச்சி தனது காமெடி மற்றும் சீனியாரிட்டியால் இதுவரை பயணித்து வந்தார்.
கடந்த சீசனில் அப்படி பர்ஃபார்மன்ஸ் பண்ண சுரேஷ் தாத்தாவையே சீக்கிரமாக வெளியே துரத்தி விட்டனர். பிக் பாஸ் வீட்டில் வயதான போட்டியாளர்கள் வந்தாலே சீக்கிரம் வெளியேற்றத்தான் என இருந்த கருத்தை உடைத்து இமான் அண்ணாச்சி கடைசி வரை வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 70வது நாளில் அவர் வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த வாரமும் கடைசி இடத்தில் அபிநய் மற்றும் வருண் தான் இருந்த நிலையில், இந்த வாரம் இமான் அண்ணாச்சி எப்படி எலிமினேட் செய்யப்பட்டார் என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஜெமினி கணேசனின் பேரன் என்பதாலே இத்தனை வாரங்களாக அபிநய் தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருகிறாரா? பிக் பாஸ் நிகழ்ச்சியில் கொஞ்சமும் ரியாலிட்டி இல்லாமல் இந்த சீசன் முழுவதும் செட்டப் ஆகவே செல்வதாக தெரிகிறதே என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஆரம்பத்திலேயே அபிநயை வெளியே அனுப்பி இருந்தால் பாவனிக்கு பிக் பாஸ் வீட்டில் இந்த அளவுக்கு ஒரு மோசமான பிரச்சனை கிளம்பி இருக்காது.
அமீருடன் பாவனி சிரித்து பேசி அடித்து விளையாடும் போது அபிநய் எப்படி ரியாக்ஷன் பண்ணுகிறார் என்பதை பிக் பாஸ் வீட்டு கேமராக்கள் காட்டி கொடுத்து விட்டன என்றும் ரசிகர்கள் கிழித்துத் தொங்கவிட்டு வருகின்றனர்.
பிக் பாஸ் வீட்டில் அரசியல் டாஸ்க் வைத்து கடைசி நேரத்தில் பெரிய அரசியலையே நடத்தி விட்டனர். சஞ்சீவ் மற்றும் சிபி சிறப்பாக விளையாடி ஒரே கட்சியாக கூட்டணியாக இணைந்த நிலையில், திடீரென இமான் அண்ணாச்சிக்கு தலைவர் பதவியை தூக்கிக் கொடுத்து மாலை மரியாதை எல்லாம் செய்தது இந்த வாரம் அவரை வீட்டில் இருந்து வெளியேற்றத்தானா? என்கிற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர்.
இந்த வாரம் இமான் அண்ணாச்சி வெளியே போய் விட்டால் அடுத்த வாரம் தாமரை செல்வியை தான் வெளியே அனுப்ப பிளான் பண்ணுவார்கள்.
அதற்கான வேலையை இந்த வீக்கெண்ட் கமல் ஊறுகாய் கதையுடன் ஆரம்பித்து வைத்து விட்டார் என பிக் பாஸ் ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.