புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் காலை 9 மணிக்கு முன்னதாக பரீட்சை நிலையங்களுக்கு சமுகமளிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ. தர்மசேன கேட்டுக்கொண்டுள்ளார்.
நாடாளாவிய ரீதியில் இன்று(22) கடந்த ஆண்டுக்குரிய புலமைப்பரிசில் பரீட்சை சுகாதார வழிகாட்டல்களுடன் நடத்தப்படுகிறது.
2,943 பரீட்சை மையங்களில் இடம்பெறவுள்ள இந்தப் பரீட்சையில், 340,508 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.
மாணவர்களை உரிய காலநேரத்திற்குள் பரீட்சை மையங்களுக்கு அனுப்பிவைக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பெற்றோர்களிடம் கோரியுள்ளார்.
இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள பரீட்சைக்கு மாணவர்களை 9 மணியளவில் பரீட்சை மண்டபங்களுக்குள் அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.