- Advertisement -
தரம் 6 முதல் 9 வரையிலான மாணவர்களுக்கான பாடசாலை கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பது குறித்து இரண்டு வாரங்களில் தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இது குறித்து நாடாளுமன்றில் இன்று அறிவித்துள்ளார்.
நிபுணர்களின் ஆலோசனை வழிகாட்டல்களின் அடிப்படையில் பாடசாலைகள் திறக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
ஆரம்ப பிரிவு பாடசாலை கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவும், தரம் 10,11,12 மற்றும் 13 மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவும் சுகாதார தரப்பினர் அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரமளவில் ஏனைய தரங்களுக்கான கற்றல் நடவடிக்கைகளுக்காக பாடசாலை திறப்பது குறித்து கலந்தாலோசனை செய்யப்பட உள்ளது என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.