Tue, Sep27, 2022
Homeதேசியசெய்திகள்ஜனாதிபதி முன்னிலையில் வடமேல் மாகாண புதிய ஆளுநர் பதவிப்பிரமாணம்

ஜனாதிபதி முன்னிலையில் வடமேல் மாகாண புதிய ஆளுநர் பதவிப்பிரமாணம்

வடமேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அட்மிரல் ஒஃப் த ஃபீல்ட் மார்ஷல் வசந்த கரன்னாகொட, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இன்று (09) பதவிப்பிரமாணம் செய்தார்.

முன்னாள் கடற்படைத் தளபதியாக விளங்கிய வசந்த கரன்னாகொட, தாய்நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றியவராவார். அத்துடன், ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவராகவும் அவர் சேவையாற்றியுள்ளார்.

வடமேல் மாகாண ஆளுநராகவிருந்த ராஜா கொல்லுரே மறைவை அடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கே, வடமேல் மாகாணப் புதிய ஆளுநர் பதவிக்கு வசந்த கரன்னாகொட நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க