- Advertisement -
அநுராதபுரம், திரப்பனே பகுதியில் கட்டுத்துவக்கு வெடித்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் வசமிருந்த சில உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக
பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
திரப்பனே வனப்பகுதியில் விலங்குகளை வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்டிருந்த கட்டுத்துவக்கு வெடித்ததில் நேற்றிரவு 44 மற்றும் 60 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளனர்.
இதன்போது மற்றுமொருவர் காயமடைந்ததாகவும், இந்த சம்பவம் தொடர்பிலான நீதவான் விசாரணையும் பிரேத பரிசோதனையும் இன்று இடம்பெறவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறினார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திரப்பனே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.